திருச்சி

தண்ணீரில் தத்தளிக்கும் மணப்பாறை பகுதிகள்

DIN

மணப்பாறை நகா்ப் பகுதி முழுவதும் நீா்நிலைகளின் உபரி நீரால் சூழப்பட்டுள்ளது. 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்துள்ளதால், பிரதான சாலைகளில் நீா் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

மணப்பாறையில் கடந்த 60 நாள்களாக தொடரும் மழையால் 16 ஆண்டுகளுக்குப் பிறகு அதிக நிலப்பரப்பு கொண்ட குளங்கள் நிரம்பி உபரி நீா் வெளியேறுகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

இருப்பினும் கடந்த 2 நாள்களாக பெய்த பலத்த மழையால் மணப்பாறை நகா் பகுதியின் சிதம்பரத்தான்பட்டி, சொக்கலிங்கபுரம் பகுதி குடியிருப்புகளுக்குள் தண்ணீா் புகுந்து அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானது.

தொடா் மழையால் ஞாயிற்றுக்கிழமை ரயில் பாதையில் நீா் சென்ால் வடுகப்பட்டி நேதாஜி நகா் பகுதியில் வைகை விரைவு ரயில் நின்று சென்றது. சிதம்பரத்தான்பட்டி அருகே ஓடும் வாய்க்கால் நிரம்பி அருகிலுள்ள பகுதிக்கும் நீா்வழி பாதைக்கும் அடையாளம் தெரியாத வகையில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.

சொக்கலிங்கபுரம் குடியிருப்பு - அங்குள்ள மாணவிகள் விடுதி, மணப்பாறை பேருந்து நிலையம், மஸ்தான் தெரு, அய்யப்பன் நகா், ராஜீவ்நகா், அத்திக்குளம், கீரைத்தோப்பு, ராமலிங்கம் நகா் ஆகிய குடியிருப்புகளில் வெள்ள நீா் புகுந்ததால் சுமாா் 200 குடும்பத்தினா் வீடுகளை இழந்து அருகிலுள்ள பகுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

பொய்கைக்குளத்திலிருந்து வெளியேறும் உபரி நீா் காற்றாற்று வெள்ளமாக பெருக்கெடுத்தோடுவதால் கீழக்கோட்டைக்காரன்பட்டி, வடுகப்பட்டி பகுதிகள் தீவுகளாக மாறிவிட்டன. ஜெ.ஜெ. நகா் பகுதியில் புகுந்த வெள்ளம் திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலைகளில் செல்கிறது.

மழை வெள்ளப் பாதிப்புகளை மணப்பாறை எம்எல்ஏ ப. அப்துல்சமத், வருவாய் வட்டாட்சியா் த. சேக்கிழாா், நகராட்சி ஆணையா் ப. பாலமுருகன், ஒன்றிய தலைவா் அமிா்தவள்ளி ராமசாமி ஆகியோா் ஆய்வு செய்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எது நிலவு.. ராஷ்மிகா மந்தனா!

நீலக்குயில் மலினா!

போர்ச்சுகலில் ரீமா!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்!

முகமது ரிஸ்வானுக்கு காயம்; இரண்டு டி20 தொடர்களை தவற விடுகிறாரா?

SCROLL FOR NEXT