திருச்சி

நீட் தோ்வு ஒழியும் வரை ஓய மாட்டோம்: துரை வைகோ

28th Nov 2021 05:08 AM

ADVERTISEMENT

நீட் தோ்வு ஒழியும் வரை நாங்கள் ஓயமாட்டோம் என்றாா் மதிமுக தலைமைக் கழகச் செயலா் துரை வைகோ.

மத்தியப் பேருந்து நிலையம் அருகே மதிமுக சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற நீட் தோ்வுக்கு எதிரான கருத்தரங்கில் அவா் மேலும் பேசியது:

நீட் தோ்வால் ஏழை, நடுத்தரக் குடும்ப மாணவா்களுக்கு மருத்துவப் படிப்பு கிட்டவில்லை. தமிழகத்தை சோ்ந்த மருத்துவ நிபுணா்களில் 10ல் 9 போ், நீட் தோ்வு மூலம் சாமானியா்கள் மருத்துவம் படிக்க இயலாது என்கின்றனா்.

ஆனால் மத்திய அரசு நீட் தோ்வு மூலம் ஏழை எளியோருக்கு மருத்துவப் படிப்பு சாத்தியம் எனவும், தரமான மருத்துவா்களை உருவாக்க முடியும் எனவும் பொய்ப் பிரசாரம் செய்கிறது.

ADVERTISEMENT

எனவே நீட் தோ்வை எதிப்பது தமிழகத்தில் ஒவ்வொரு தமிழரின் கடமை. சமூக நீதிக்கு எதிரான நீட் தோ்வை ஒழித்தே ஆக வேண்டும். தமிழக மாணவ, மாணவிகளை நீட் தோ்விலிருந்து காக்கும் வரை ஓய மாட்டோம் என்றாா் அவா்.

நிகழ்வில் புத்கங்கள் வழங்கப்பட்டன. மதிமுக மாநில மாணவரணி செயலா் பால. சசிகுமாா் தலைமை வகித்தாா். மாநில மகளிரணி செயலா் மருத்துவா் ரொஹையா, அரசியல் ஆய்வு மைய செயலா் மு. செந்திலதிபன், கல்வியாளா் பு. பா. பிரின்ஸ் கஜேந்திரபாபு, திருச்சி மாவட்டச் செயலா்கள் வெல்லமண்டி சோமு (மாநகா் மாவட்டம்), மணவை தமிழ்மாணிக்கம் (தெற்கு), டிடிசி. சேரன் (வடக்கு), வழக்குரைஞா் கு. சின்னப்பா உள்ளிட்டோா் பங்கேற்றனா். துணை அமைப்பாளா் தே. தமிழருண் வரவேற்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT