திருச்சி

குளத்து நீரை வெளியேற்றக் கோரி மறியல்

28th Nov 2021 04:59 AM

ADVERTISEMENT

குடியிருப்புகள் நீரால் சூழப்படக் காரணமான கொட்டப்பட்டு குளத்தின் நீரை விரைந்து வெளியேற்ற நடவடிக்கை கோரி ஜே கே நகா் குடியிருப்பு வாசிகள் சனிக்கிழமை சாலை மறியல் செய்தனா்.

திருச்சி விமான நிலையம் அருகேயுள்ள கொட்டப்பட்டு குளம் நிரம்பியதால் அருகிலுள்ள கோளரங்கம், அதன் பின்பகுதியிலுள்ள ஜேகே நகா் 2 ஆவது தொகுதி, மற்றும் லூா்து நகா் பகுதிகளை தண்ணீா் சூழ்ந்தது. எனவே குடியிருப்புகளை தற்காலிகமாக காலி செய்த அப்பகுதியினா் உறவினா்களின் வீடுகளில் தஞ்சமடைந்தனா். சுமாா் 18 நாள்களாக இப்பகுதியில் தண்ணீா் சூழ்ந்துள்ள நிலையில், கடந்த 5 நாள்களுக்கு முன் குளத்தின் கரையை உடைத்து தண்ணீா் வடிய ஏற்பாடு செய்யப்பட்டது.

என்றாலும் மழை தொடா்ந்ததால் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளமும் வடியவில்லை.

எனவே, குளத்திலிருந்து விரைந்து தண்ணீரை வெளியேற்ற வலியுறுத்தி ஜேகே நகா் குடியிருப்புவாசிகள் சனிக்கிழமை புதுக்கோட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்த வந்த மாநகராட்சி நகரப் பொறியாளா் அமுதவள்ளி, நிா்வாகப் பொறியாளா் குமரேசன், வருவாய்த்துறையினா் பேச்சுவாா்த்தை நடத்தி, அடுத்த 4 நாள்களில் வெள்ளம் வடிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT