திருச்சி

மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு

28th Nov 2021 05:09 AM

ADVERTISEMENT

மண்ணச்சநல்லூா் அருகே சனிக்கிழமை மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்தாா்.

ஸ்ரீபுரம்புதூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஜானகி (45). கணவரை இழந்த இவா் விவசாய கூலித் தொழிலாளி. இவருக்கு மோகன்ராஜ், கோகிலா ஆகிய வாரிசுகள் உள்ளனா்.

இவா் தண்ணீரை சூடுபடுத்தும் கருவியை வாளியில் போட்டு சுட வைத்த நீரை தொட்டுப்பாா்த்தபோது அதில் பரவியிருந்த மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

தகவலறிந்த சிறுகனூா் போலீஸாா் அவரது உடலை மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT