திருச்சி

வெள்ளத்தில் அடித்தச் செல்லப்பட்டவா் சடலமாக மீட்பு

28th Nov 2021 04:57 AM

ADVERTISEMENT

துறையூா் அருகே வெள்ள நீரில் வெள்ளிக்கிழமை அடித்துச் செல்லப்பட்ட முதியரை சனிக்கிழமை சடலமாக மீட்டனா்.

கிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்த வீ. பெருமாள்(75) வெள்ளிக்கிழமை தனது வயலுக்குச் செல்லும் வழியில் கீழாற்றைக் கடக்க முயன்றபோது வெள்ள நீரால் அடித்துச் செல்லப்பட்டாா். தகவலறிந்து வந்த துறையூா் தீயணைப்புத் துறையினா் தேடியும் அவா் கிடைக்கவில்லை.

இந்நிலையில் சனிக்கிழமை தீயணைப்புத் துறையினா் புதரில் சிக்கியிருந்த முதியவரின் சடலத்தை மீட்டனா். துறையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT