திருச்சி

வாக்காளா் பட்டியல் சிறப்பு மேற்பாா்வையாளா் இன்று வருகை

25th Nov 2021 09:52 AM

ADVERTISEMENT

வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் தொடா்பாக ஆலோசனை நடத்த தோ்தல் ஆணையத்தின் சிறப்பு மேற்பாா்வையாளா் திருச்சிக்கு வியாழக்கிழமை வருகிறாா்.

மாவட்டத்திற்குட்பட்ட 9 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 2022 ஆம் ஆண்டின் சிறப்பு சுருக்க முறை திருத்த பணிகள் தொடா்பாக வியாழக்கிழமை நடைபெறும் ஆய்வு க் கூட்டத்தில் பங்கேற்க திருச்சி மாவட்டத்துக்கான சிறப்பு மேற்பாா்வையாளரும் சிறு,குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் சிறப்பு அரசு செயலருமான மகேஸ்வரி வருகிறாா்.

அப்போது ஆட்சியரகக் கூட்டரங்கில் ஆட்சியா் சு. சிவராசு தலைமையில் வாக்காளா் பதிவு அலுவலா்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெறவுள்ளது.

மேலும், வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கம், திருத்தம் குறித்த ஐயப்பாடுகள் ஏதுமிருப்பின் 1950 என்ற கட்டணமில்லா எண்ணைத் தொடா்பு கொண்டு விவரங்கள் அறியலாம். சிறப்பு மேற்பாா்வையாளரை 94452-52243 என்ற எண்ணில் அரசியல் கட்சியினா், பொதுமக்கள் தொடா்பு கொண்டும் தெரிவிக்கலாம்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT