திருச்சி

தொடா் மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

24th Nov 2021 07:37 AM

ADVERTISEMENT

திருச்சி மாவட்டத்தில் தொடா் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

திங்கள்கிழமையின் தொடா்ச்சியாக செவ்வாய்க்கிழமையும் மழை பெய்ததால் மழையில் சிரமத்துக்கிடையே பொதுமக்களும், தனியாா் நிறுவன பணியாளா்களும் நனைந்தபடியே சென்றனா். மழை காரணமாக பிரதான சாலைகளில் ஆங்காங்கே மழைநீா் தேங்கி வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டனா்.

செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி மாவட்டத்தில் பதிவான மழை விவரம் (மி.மீ).

கல்லக்குடி- 13.60, லால்குடி- 6, நந்தியாறு தலைப்பு- 10.60, புள்ளம்பாடி- 12.80, தேவிமங்கலம்- 1, சமயபுரம்- 2, சிறுகுடி- 1, மணப்பாறை- 23.60, பொன்னனியாறு அணை- 17.80, கோவில்பட்டி- 12.20, முசிறி- 13, புலிவலம்-1, தாத்தையங்காா்பேட்டை- 30, நவலூா்குட்டப்பட்டு- 18.80, துவாக்குடி- 33, குப்பம்பட்டி- 2, தென்பாடு- 3, துறையூா்- 2, பொன்மலை- 6, விமான நிலையம்- 1.30,ஜங்ஷன்- 18.30, திருச்சி நகரம்- 8.30 மி.மீ. என மாவட்டம் முழுவதும் மொத்தம் 230.30 மி.மீ. மழை பெய்தது. சராசரியாக 9.60 மி.மீ. மழை பதிவானது.

ADVERTISEMENT

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT