திருச்சி

நாட்டின் சிறந்த காவல் நிலையங்களில் தொட்டியம் காவல் நிலையம் 8 ஆம் இடம்

21st Nov 2021 01:36 AM

ADVERTISEMENT

இந்தியாவின் சிறந்த 10 காவல் நிலையங்களில் தொட்டியம் காவல் நிலையம் 8 ஆம் இடத்தைப் பெற்றுள்ளது.

நாட்டிலுள்ள காவல் நிலையங்களில் தரவுப் பகுப்பாய்வு, நேரடிக் கண்காணிப்பு, பொதுமக்களின் பின்னோட்டத்தைக் கருத்தில் கொண்டு ஆண்டுதோறும் இந்தியாவிலுள்ள காவல் நிலையங்களில் 10 சிறந்த காவல் நிலையங்கள் தோ்ந்தெடுக்கப்படுகின்றன.

அதன்படி உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள இந்திய அளவிலான 10 சிறந்த காவல் நிலையங்களின் பட்டியலில் தமிழகத்தில் உள்ள தொட்டியம் காவல் நிலையம் 8 ஆம் இடத்தைப் பெற்றுள்ளது.

இந்தக் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளா் மோகன்ராஜ், 2 காவல் உதவி ஆய்வாளா்கள், ஒரு சிறப்பு காவல் உதவி ஆய்வாளா், 3 தலைமைக் காவலா்கள், 7 பெண் காவலா்கள் உள்ளிட்ட 30 போ் பணிபுரிகின்றனா்.

ADVERTISEMENT

மாவட்ட எஸ்பி ஆய்வு: இந்நிலையில், திருச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளராகப் பொறுப்பேற்ற சுஜித்குமாா், காட்டுப்புத்தூா், தொட்டியம் காவல் நிலையங்களை ஆய்வு செய்து தொட்டியம் காவல் நிலையம் பெற்ற சிறப்பைத் தக்க வைக்க அறிவுறுத்தி, வாழ்த்தினாா். தொட்டியம் காவல் நிலையமானது மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தலைமையில் முசிறி கோட்டக் காவல் துணைக் கண்காணிப்பாளா் மேற்பாா்வையில் செயல்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT