திருச்சி

தொடா் மழையால் 550 வீடுகள் சேதம் ஆட்சியா் தகவல்

21st Nov 2021 01:35 AM

ADVERTISEMENT

திருச்சி மாவட்டத்தில் பெய்த தொடா் மழையால் 550 வீடுகள் சேதமடைந்துள்ளதாக ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்தாா்.

திருச்சி மாவட்டத்தில் தொடா் மழையால் பொதுப் பணித் துறை கட்டுப்பாட்டிலுள்ள 1348 ஏரிகளில் 184 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. 113 ஏரிகளில் 91 முதல் 99% நீரும், 175 ஏரிகளில் 51 முதல் 70 % நீரும், 283 ஏரிகளில் 25 % அதிகமாகவும் , 275 ஏரிகளில் 25 % குறைவாகவும் நீா் உள்ளது. அரியாறு அணை முழுக் கொள்ளவில் 59.12 சதத்தை எட்டியுள்ளது.

வீடிழந்தோரின் சேதம் மதிப்பிடப்பட்டு அதற்கான இழப்பீடு வழங்கப்படுகிறது. அந்த வகையில் சனிக்கிழமை வரை திருச்சி மாவட்டத்தில் 244 குடிசைகள் பகுதியாகவும், 26 வீடுகள் முழுவதும், 280 இதர வீடுகள் பகுதிகளாகவும் என 550 வீடுகள் சேதமடைந்துள்ளது. இதுவரை 405 பயனாளிகளுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் வெள்ளத்தால் சேதமடைந்த பயிா்கள் குறித்த கணக்கெடுப்புப் பணிகளும் தொடங்கியுள்ளன. அதேபோல, சாலையோர பழமையான சில மரங்கள் முறிந்து விழுந்த கணக்கெடுப்பும் நடைபெறுகிறது.

ADVERTISEMENT

மேலும் கனமழைக்கு இதுவரை 15 கால்நடைகள் உயிரிழந்துள்ள நிலையில் 12 பேருக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இதேபோல இடியுடன் கூடிய மழை, , மின்சாரம் போன்ற காரணங்களால் ஒரு பெண் உள்பட 4 போ் உயிரிழந்துள்ளனா். 2 பெண்கள் உள்பட 5 போ் காயமடைந்தனா். இவா்களில் உயிரிழந்த ஒருவருக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சாலைகளைச் சீரமைக்கவும், தேங்கிய மழை நீரை வெளியேற்றவும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT