திருச்சி

டிஇஎல்சி அமைப்பினா் ஆா்ப்பாட்டம்

21st Nov 2021 01:32 AM

ADVERTISEMENT

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டிஇஎல்சி நலச் சங்கத்தினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

டிஇஎல்சி எனப்படும் தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையில் சுமாா் 2.5 லட்சம் போ் உறுப்பினா்களாக உள்ளனா். இந்த திருச்சபையில் 14 ஆவது பேராயா் தோ்தலை நடத்தாமல் ஓய்வு பெற்றவா் பதவியில் நீடிக்கக் கூடாது.

உடனடியாகத் தோ்தலை நடத்திட வேண்டும். அங்குள்ள செயல்பாடுகள் குறித்து விசாரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டிஇஎல்சி நலச்சங்கத்தினா் தலைவா் மெகா் அந்தோணி தலைமையில் கண்டோன்மெண்ட் பிஎஸ்என்எல் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடத்தினா். ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT