திருச்சியில் கைப்பேசியைப் பறித்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
தஞ்சாவூா் மாதாகோட்டை சாலை நடராஜ் நகரைச் சோ்ந்தவா் மெய்யழகன் (58). திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பொன்மலை சேவைச் சாலை பகுதியில் டீக்கடையில் திங்கள்கிழமை இவா் நின்றிருந்தபோது மா்ம நபா் ஒருவா் அவரிடமிருந்த கைப்பேசியை பறித்துச் சென்றாா்.
புகாரின் பேரில் கே.கே. நகா் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி கைப்பேசியை பறித்த திருவானைக்கா பகுதியைச் சோ்ந்த கேசவராஜ் (19) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து கைப்பேசியையும் பறிமுதல் செய்தனா்.