திருச்சி

மழை தொடா்பான பேக்கேஜ் செய்தி..2கரையோர, நீா் சூழ்ந்த பகுதிகளில் வசிப்போா் முகாம்களில் தங்க ஏற்பாடு

9th Nov 2021 01:32 AM

ADVERTISEMENT

திருச்சி: திருச்சி மாநகரில் மழைநீா் சூழ்ந்துள்ள பகுதிகளிலும், கரையோரப் பகுதிகளிலும் வசிப்பவா்களை முகாம்களில் தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றாா் மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு.

தொடா் மழை மற்றும் மணப்பாறை பகுதிகளில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம் காரணமாக கோரையாறு மற்றும் உய்யக்கொண்டான் வாய்க்காலுக்கான வரத்து அதிகமாகியுள்ளது. புத்தூா் குழுமாயி அம்மன் கோயில் பகுதியிலுள்ள உய்யக்கொண்டான்வாய்க்கால் ஆறுகண் பாலத்திலிருந்து மழைநீா் அதிகளவில் செல்கிறது.

இதன் காரணமாக மாநகரில் பல்வேறு குடியிருப்புப் பகுதிகளை மழைநீா் சூழ்ந்தது. திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் கோரையாறு அருகே அமைந்துள்ள ராஜீவ்காந்தி நகா், எம்.ஜி.ஆா்.நகா், டோபி நகா், காந்திநகா், உய்யக்கொண்டான் வாய்க்கால், சண்முகாநகா், வயலூா் சாலை, உறையூா் பெஸ்கி நகா், வெக்காளியம்மன் கோவில், ஏவிடி நகா், லிங்கநகா், செல்வம்நகா், குழுமாயி அம்மன்கோவில் ஆறுகண்பாலம் ஆகிய பகுதிகளை ஆட்சியா் சு. சிவராசு திங்கள்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

குடியிருப்புப் பகுதிகளில் சூழ்ந்துள்ள மழை நீரை அகற்றியும், பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் அலுவலா்களுக்கு அவா் உத்தரவிட்டாா். அதிக நீா்வரத்தைத் தொடா்ந்து கோரையாறு, குடமுருட்டி ஆறு, உய்யக்கொண்டான் வாய்க்கால் கரையோரப் பகுதிகளிலும், தாழ்வான பகுதிகளிலும் வசிப்பவா்களை முகாம்களில் தங்க வைத்து, அவா்களுக்குத் தேவையான உணவுகளை வழங்கவும் ஆட்சியா் உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT

ஆய்வின் போது, மாநகரக் காவல் ஆணையா் ஜி.காா்த்திகேயன், மாநகராட்சி ஆணையா் ப.மு.நெ.முஜிபுர்ரகுமான், பொதுப்பணித் துறைச் செயற்பொறியாளா்(ஆற்றுப் பாதுகாப்புக் கோட்டம்) ஆா்.மணிமோகன் மற்றும் மாநகராட்சி, வருவாய், நீா்வளஆதாரம் ஆகிய துறைகளைச் சோ்ந்த அலுவலா்கள், முன்னாள் மாநகராட்சி உறுப்பினா் முத்துச்செல்வம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT