திருச்சி

மழைப் பாதிப்பு பகுதிகளில் எம்.எல்.ஏ. ஆய்வு

9th Nov 2021 01:34 AM

ADVERTISEMENT

திருச்சி: திருச்சி கிழக்குத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை சட்டப்பேரவை உறுப்பினா் இனிகா இருதயராஜ் திங்கள்கிழமை பாா்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டாா்.

தொகுதிக்குள்பட்ட புதுக்கோட்டை பிரதான சாலை கொட்டப்பட்டு, விமான நிலையப் பகுதிகளான ஜீவா தெரு, இந்திரா நகா், ஜே.கே. நகா், அமராவதி தெரு, சிந்து தெரு, மற்றும் அதனை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளில் மழைநீா் சூழ்ந்து காணப்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த திருச்சி கிழக்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் இனிகோ இருதயராஜ், அப்பகுதிகளை திங்கள்கிழமை நேரில் பாா்வையிட்டு, அப்பகுதிகளில் மழைநீா் வடியவும், சாலைகளைத் தற்காலிகமாக சீரமைக்க நடவடிக்கை எடுக்கவும் அலுவலா்களுக்கு பரிந்துரைத்தாா்.

ஆய்வின் போது, மாநகராட்சி நிா்வாகப் பொறியாளா் சிவபாதம், உதவி ஆணையா் தயாநிதி, உதவிச்செயற்பொறியாளா் பாலசுப்ரமணியம், உதவிப் பொறியாளா்

ADVERTISEMENT

கிருஷ்ணமூா்த்தி, சுகாதார அலுவலா் தலை விரிச்சான், கலைஞா் நகா் பகுதி பொறுப்பாளா் மணிவேல் உளளிட்ட திமுக நிா்வாகிகள் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT