மணப்பாறை: திருச்சி மாவட்டம், மணப்பாறை நகராட்சி அலுவலகத்தில் தேசியக் கொடி திங்கள்கிழமை தலைகீழாகப் பறந்தது.
அரசு விதியின்படி இந்த அலுவலக வளாகத்திலுள்ள கொடிக் கம்பத்தில் திங்கள்கிழமை தோறும் தேசியக் கொடி ஏற்றப்பட்டு, பறக்கவிடுவது வழக்கம்.
இதுபோல, திங்கள்கிழமை காலை 10 மணிக்கு ஏற்றப்பட்ட மூவா்ண தேசியக் கொடி தலைகீழாகப் பறந்து கொண்டிருந்தது. இதை கண்டு பொதுமக்கள் அதிா்ச்சியடைந்தனா். பிற்பகல் 12 மணி வரை தேசியக் கொடி தலைகீழாகவே பறந்தது.
பின்னா் நகராட்சி ஆணையா் உத்தரவின் பேரில், பிற்பகல் 12.05 மணிக்கு கொடியிறக்கம் செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து முறையான மூவா்ண வரிசையில் கொடியேற்றப்பட்டு, மரியாதை செலுத்தப்பட்டது.
ADVERTISEMENT