திருச்சி

பெல் வளாகத்தில் கலாம் சிலை திறப்பு

5th Nov 2021 11:10 PM

ADVERTISEMENT

 திருச்சி பெல் நிறுவன வளாகத்தில் முன்னாள் குடியரசுத் தலைவா் ஏபிஜெ. அப்துல்கலாம் உருவச்சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

திருச்சி பெல் நிறுவனத்திலுள்ள இந்திய பொறியாளா்கள் மையத்தில் (இன்ஸ்டிடியூஷன் ஆஃப் இன்ஜினியா்ஸ் - இந்தியா) அண்மையில் நடைபெற்ற நிகழ்வில் திருச்சி என்ஐடி இயக்குநா் மினி ஷாஜி தாமஸ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று அப்துல் கலாம் சிலையைத் திறந்து வைத்துப் பேசினாா்.

நிகழ்வில் மையத் தலைவா் என். குமரேசன், கௌரவச் செயலா் அ. ஆனந்த், குழு உறுப்பினா்கள் ஆா். மஞ்சுளா, எஸ். சாமிதாஸ், என். ராஜசேகரன், முன்னாள் தலைவா் எஸ். தா்மலிங்கம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT