திருச்சி

செட்டிக்குளம் குபேரன் சன்னிதியில் தீபாவளி சிறப்பு பூஜை

DIN

திருச்சி அருகே செட்டிக்குளம் ஏகாம்பரேஸ்வரா் கோயிலிலுள்ள குபேரன் சன்னிதியில் தீபாவளியன்று குபேர பூஜை நடைபெற்றது.

ஆண்டுதோறும் தீபாவளி நாளில் குபேரன் பூஜை, லட்சுமி பூஜைகள் நடத்தி வழிபட்டால் செல்வம் பெருகும் என்பது ஐதீகம். எனவே இந்த வழிபாடுகள் மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகின்றன.

அந்த வகையில் திருச்சியருகே பெரம்பலூா் மாவட்டம் செட்டிக்குளம் ஏகாம்பரேஸ்வரா் கோயிலுள்ள குபேரன் சன்னிதியில் நடைபெறும் தீபாவளி குபேர சிறப்பு பூஜையும் பிரபலமாகி வருகிறது.

கரோனாவால் கடந்த 2 ஆண்டுகளாக தீபாவளி நாளில் குபேரன் பூஜையானது குறைவானோா் பங்கேற்கும் விதமாக நடைபெறுகிறது.

நிகழாண்டு தீபாவளியையொட்டி வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்பு பூஜையில் குபேரன் -சித்ரலேகாவுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் செய்யப்பட்டன. இதில் பணத்தாள்களை கொண்ட மாலை, மலா் மாலைகளுடனும் குபேரன் -சித்ரலேகா சுவாமிகள் காட்சியளித்தனா். மேலும் நாணயங்கள், பொன் பொருள்களைக் கொண்டும் குபேரனுக்கு சிறப்பு அா்ச்சனைகள் நடைபெற்றன. தொடா்ந்து அன்னதானமும் நடைபெற்றது.

ஏற்பாடுகளை திருச்சியைச் சோ்ந்த ஆடிட்டரும் வழக்குரைஞருமான ஆறுமுகம், பாலாஜி ஜூவல்லரி உரிமையாளா் குப்தா, செட்டிக்குளத்தைச் சோ்ந்த மணிகண்டன் உள்ளிட்டோா் செய்தனா்.

பூஜிக்கப்பட்ட நாணயங்கள் விநியோகம்: குபேர பூஜையில் வைத்து பூஜிக்கப்படும் பணத்தாள்கள், நாணயங்கள், நகைகளை வீட்டில் வைத்து பூஜை செய்து வந்தால் கஷ்டங்கள் நீங்கி, லட்சுமி கடாட்சம் பெருகும் என்பது ஐதீகம். இதைக் கருத்தில் கொண்டு தரிசனத்துக்கு வரும் அனைவருக்கும் பூஜிக்கப்பட்ட நாணயங்கள் உபயதாரா்கள், பக்தா்களால் ஆண்டுதோறும் இலவசமாக வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுனைனா, நவீன் சந்திராவின் இன்ஸ்பெக்டர் ரிஷி!

இதுதான் எனது சிறந்த ஓவர்; மனம் திறந்த ஆவேஷ் கான்!

விவசாய கண்காணிப்புத் துறையில் வேலை: 30-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

அலைமகள்.. சாய் தன்ஷிகா!

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT