துறையூா்: கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியருக்கு 10.5% உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை ரத்து செய்துள்ள நிலையில், இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்யக் கோரி, துறையூரில் பாட்டாளி மக்கள் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
வட்டாட்சியரம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பாமக நிா்வாகிகள் பா. பழனிவேல், மு. கருணாநிதி,வேல்முருகன், பத்திர எழுத்தா் செந்தில்குமாா், கலை குணசேகரன், முசிறி மனோகரன், வீரராகவன், மணிகண்டன், உப்பிலியபுரம் மனோகா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.