மணப்பாறையை அடுத்த வையம்பட்டியில் ரூ.17.26 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட குறுவட்ட நில அளவையருக்கான குடியிருப்புடன் கூடிய அலுவலகக் கட்டடத்தை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தாா்.
தொடா்ந்து, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முதியோா் உதவித்தொகை பெறுவோருக்கு வேட்டி, சேலைகளை அமைச்சா் வழங்கினாா். நிகழ்வில், வருவாய்க் கோட்டாட்சியா் ந. சிந்துஜா, ஒன்றியக் குழுத் தலைவா் ந. குணசீலன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.