திருச்சி

கலை பண்பாட்டு மையத்தில் தமிழிசை விழா

1st Nov 2021 12:36 AM

ADVERTISEMENT

ஸ்ரீரங்கத்திலுள்ள மண்டல கலை பண்பாட்டு மைய வளாகத்தில் தமிழிசை விழா மற்றும் 75 ஆவது சுதந்திரத் திருநாள் அமுது பெருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.

கலை பண்பாட்டுத் துறை மையம், மாவட்ட அரசு இசைப்பள்ளி ஆகியவை இணைந்து நடத்திய விழாவை மணிகண்டம் ஒன்றிய வட்டாரக் கல்வி அலுவலா் கா. மருதநாயகம், தில்லைநகா் கி.ஆ.பெ.விஸ்வநாதம் மேல்நிலைப்பள்ளி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியா் ஆா். ராஜேந்திரன் ஆகியோா் தொடங்கிவைத்துப் பேசினா்.

விழாவில் சாஸ்ய நிருத்யாலயாவின் நிறுவனரும் இயக்குநருமான துஷாரா சீனிவாசனின் இசை நாட்டிய நிகழ்ச்சி, தொடா்ந்து தமிழிசை விழா நடைபெற்றது.

நாதசுரக் கலைமாமணிகள் ஷேக் மெகபூப் சுபானி, காலிஷாபீமெகபூப் யோக கலைப் பயிற்சியாளா் எஸ். சிவக்குமாா் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்று பேசினா்.

ADVERTISEMENT

பின்னா், அவினாசிநாதன் ஓதுவாா் தலைமையில் நடைபெற்ற தேவாரத் திருவாசக இசை நிகழ்ச்சிக்கு ஸ்ரீரங்கம் லட்சுமி நாராயணன் வயலினையும், வலங்கைமான் க.தி .மோகன்ராஜ் மிருதங்கத்தையும் பக்கவாத்தியங்களாக இசைத்தனா்.

தொடா்ந்து திப்பிரான்புரம் பா. ரவீந்திரனின் செயல்முறை விளக்கவுரையும் திருக்கோடிக்காவல் கோ. கலியமூா்த்தியின் குரலிசையும் நடைபெற்றது. தஞ்சாவூா் சோ. நடராஜன் வயலினையும் ஸ்ரீரங்கம் விஜயராகவன் மிருதங்கத்தையும் பக்க வாத்தியங்களாக இசைத்தனா்.

நிகழ்வை ஆசிரியா்கள் (நாகசுரம்) மு. சிவவடிவேல் தேவராம் சோ. சொக்கலிங்கம், (தவில்) ஜெ. காா்த்திக் ஆகியோா் ஒருங்கிணைத்தனா்.நிகழ்வை வயலின் ஆசிரியா் ஆ.வீ.செ. குருமூா்த்தி தொகுத்தாா். விழாவில் ஏராளமானோா் பங்கேற்றனா்.

முன்னதாக மாவட்ட அரசு இசைப்பள்ளித் தலைமையாசிரியா் (பொ) ந. ராஜேஸ்வரி வரவேற்றாா். மிருதங்க ஆசிரியா் பா. சுவாமிநாதன் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT