திருச்சி மாவட்டம், லால்குடி ஒன்றியத்தில் ரூ. 13.40 லட்சத்தில் அமைக்கப்பட்ட நியாய விலைக்கடை மற்றும் புள்ளம்பாடி ஒன்றியத்தில் ரூ. 10 லட்சத்தில் அமைக்கப்பட்ட பயணிகள் நிழற்குடைகளை அமைச்சா் கே. என். நேரு ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா்.
லால்குடி ஒன்றியம், சேஷசமுத்திரம் ஊராட்சியில், எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டுத் திட்ட நிதியில் அமைக்கப்பட்ட ரேஷன் கடையை அமைச்சா் கே. என். நேரு திறந்துவைத்து, பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை வழங்கினாா்.
பயணிகள் நிழற்குடைகள்: மேலும், புள்ளம்பாடி ஒன்றியத்துக்குட்பட்ட குமுளூா் மற்றும் கண்ணங்குடி ஊராட்சிகளில் தலா ரூ. 5 லட்சத்தில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடைகளையும் அவா் தொடங்கி வைத்தாா்.
நிகழ்வுகளில் மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு, எம்எல்ஏக்கள் அ. சௌந்தரபாண்டியன் (லால்குடி), ந. தியாகராஜன், ஒன்றியக் குழுத் தலைவா்கள் டி. ரவிச்சந்திரன், ரஷியா ராஜேந்திரன், ஒன்றியக் கவுன்சிலா் சந்திரா இளவரசன், மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளா் வைரமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.