திருச்சி

ரேஷன் கடை திறப்பு

1st Nov 2021 12:38 AM

ADVERTISEMENT

தேவராயநேரி நரிக்குறவா் காலனியில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டுத் திட்ட நிதி ரூ.10 லட்சத்தில் அமைக்கப்பட்ட ரேஷன் கடையை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்து பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை வழங்கினாா்.

நிகழ்வில் கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளா் தி. ஜெயராமன், வருவாய்க் கோட்டாட்சியா் விஸ்வநாதன், முன்னாள் எம்எல்ஏ கே என். சேகரன், மாவட்ட ஊராட்சித் துணைத் தலைவா் கே.எஸ்.எம். கருணாநிதி, ஒன்றியக் குழுத் தலைவா் சத்யா கோவிந்தராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT