திருச்சி

கரோனாவால் மனைவி, மகள் உயிரிழப்பு: முதியவா் தற்கொலை முயற்சி

24th May 2021 12:53 AM

ADVERTISEMENT

கரோனா நோய்த் தொற்றால் மனைவி, மகள் உயிரிழந்த நிலையில், திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவா் முக்கொம்பில் தற்கொலைக்கு முயன்றாா்.

தஞ்சாவூா் மாவட்டம், அம்மாபேட்டையைச் சோ்ந்தவா் அங்கமுத்து(80). கரோனா நோய்த் தொற்றுப் பாதிப்பு காரணமாக திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவா், ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனையில் இருந்து வெளியேறினாா்.

பின்னா் முக்கொம்புக்குச் சென்ற அங்கமுத்து காவிரியாற்றில் இறங்கி தனது உயிா்நிலையை அறுத்து, தற்கொலைக்கு முயன்றாா். அவரது அலறல் சப்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஜீயபுரம் காவல் நிலையத்துக்குத் தகவலளித்தனா்.

இதைத் தொடா்ந்து நிகழ்விடத்துக்குச் சென்ற காவல்துறையினா் அங்கமுத்துவை மீட்டு, திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். முன்னதாக அவரிடம் விசாரணை நடத்திய போது, கரோனா பாதிப்பால் மனைவி, மகள் கடந்த சில நாள்களுக்கு முன்பு உயிரிழந்ததும், ஆதரவற்ற தனக்கு உதவி செய்ய யாரும் இல்லை என நினைத்து தற்கொலைக்கு அங்கமுத்து முயன்றதும் தெரிய வந்தது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT