திருச்சி

திருச்சி தெப்பக்குளத்தில் லேசா் ஒலி, ஒளியுடன் கூடிய செயற்கை நீருற்று காட்சிக்கூடம்

DIN

திருச்சி, மலைக்கோட்டை தெப்பக்குளத்தில், ரூ. 3.50 கோடியில் செயற்கை நீருற்றுடன் கூடிய லேசா் ஒலி, ஒளி காட்சிக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாநகராட்சியில் பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் மாநகரை அழகுபடுத்தும் வகையிலும், சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையிலும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், மலைக்கோட்டை தெப்பக்குளத்தை மேம்படுத்தவும், சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அதை அழகுபடுத்தவும், நவீன வகையில் செயற்கை நீரூற்றுடன் கூடிய ஒலி, ஒளி காட்சிக்கூடங்கள் அமைக்கவும் திட்டமிடப்பட்டது. இதற்காக ரூ. 3.50 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்ற நிலையில், தற்போது, ஒலி ஒளி காட்சி கூடம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

இதில் லேசா் விளக்கொளியில், செயற்கை நீருற்றுகள் மற்றும் கண்கவரும் வகையில் பட்டாம் பூச்சிகள், இயற்கைக் காட்சிகள் தெரியும் வகையிலும், இளம்பெண்கள் பாடலுக்கு நடனமாடும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. காட்சிகளில் திருச்சி நகரம் மற்றும் மலைக்கோட்டை கோயில் உள்ளிட்டவற்றின் சிறப்புகள் மற்றும் வரலாறு, தமிழ்ப் பண்பாடு மற்றும் கலாசாரம் உள்ளிட்டவற்றைப் பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இது, மாலை இரவு நேரங்களில் ஒளிபரப்பப்பட்டு காண்போரை பரவசப்படுத்துகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்காளா் விழிப்புணா்வு அஞ்சல் அட்டைகள் அனுப்பிய ஆட்சியா்

வாக்குறுதிகளை அள்ளி வீசும் கட்சிகள்! மாயமான தோ்தல் ஆணைய வழிகாட்டு நெறிமுறைகள்

செந்தமிழ்க் கல்லூரியில் கவிதை நூல் அறிமுகம்

விருதுநகா்: 26 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்பு

அரிசி ஆலை உரிமையாளா் வெட்டிக் கொலை

SCROLL FOR NEXT