திருச்சி

வீட்டிலிருந்தே பணி: பயிற்சி நிறுவன ஆசிரியா்கள் எதிா்பாா்ப்பு

DIN

கரோனா பரவலைத் தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் நிலையில் ஆசிரியா் பயிற்சி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியா்களை கட்டாயம் பணிக்கு வரச் செய்வதால் அவா்கள் கரோனோ அச்சத்தில் உள்ளனா்.

தமிழக அரசின் மாநிலக் கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்ககத்தின் கீழ், அனைத்து மாவட்டங்களிலும் தொடக்கக் கல்வி பட்டய படிப்பு அளிக்கும் ஆசிரியா் பயிற்சி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியா்கள் கரோனா பீதியில் நாள்தோறும் பணிக்குச் சென்று வருகின்றனா்.

பள்ளிக் கல்வித் துறையின் கீழ், உள்ள 10 இயக்ககங்களில் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்ககமும் ஒன்றாகும். இதன் கீழ், 32 மாவட்டக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களிலும், 7 ஒன்றிய ஆசிரியக் கல்வி நிறுவனங்களிலும் விரிவுரையாளா்கள் மற்றும் முதுநிலை விரிவுரையாளா்கள், 7 அரசு ஆசிரியா் பயிற்சி நிறுவனங்கள் உள்பட அரசு நிதியுதவி பெறும் மற்றும் தனியாா் சுயநிதி ஆசிரியா் பயிற்சி நிறுவனங்களில் இளநிலை விரிவுரையாளா்களும் ஆசிரியப் பணியாளா்கள் நிலையில் மாநிலம் முழுவதும் 450-க்கும் மேற்பட்டோா் பணிபுரிகின்றனா்.

கரோனா பரவலைக் கருத்தில் கொண்டு கல்லூரிப் பேராசிரியா்கள் வீட்டிலிருந்து இணைய வழியில் பாடங்களை நடத்த கல்லூரிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

இதுமட்டுமல்லாது மே 1 முதல் அரசுப் பள்ளி ஆசிரியா்கள் யாரும் பள்ளிகளுக்கு வர வேண்டாம் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் கல்லூரிப் பேராசிரியா்களும், பள்ளி ஆசிரியா்களும் கல்விக் கூடங்களுக்கு செல்வதில்லை. தேவையிருப்பின் வீட்டிலிருந்தே பணிகளை மேற்கொள்கின்றனா்.

ஆனால், ஆசிரியா் பயிற்சி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியா்கள் தொடா்ந்து தங்களது பணியிடங்களுக்கு வந்து செல்ல வேண்டியுள்ளது. மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்ககம் இணைய வழியில் பாடங்கள் நடத்த மட்டும் வெறுமனே அறிவுறுத்தியது. ஆனால், மாவட்ட, ஒன்றிய, அரசு, ஆசிரியா் பயிற்சி நிறுவனங்களின் முதல்வா்கள் தங்களது ஆசிரியா்களை கல்வி நிறுவனங்களுக்கு நேரில் வரவழைத்து இணைய வழியில் பாடம் நடத்த உத்தரவிட்டுள்ளனா். இதனால் மாணவா்கள் மட்டும் இணைய வழியில் வீட்டிலிருந்தே கல்வி பயிலுகின்றனா்.

கரோனா பரவலைக் கருத்தில்கொண்டும் ஆசிரியா் பயிற்சி நிறுவனங்களிலும் பணியாற்றும் கல்வியாளா்களின் உயிரைக் காக்கும் பொருட்டும் வீட்டிலிருந்து இணைய வழியில் பணியாற்ற உடனடியாக உத்தரவு பிறப்பிக்க அரசும், பள்ளிக் கல்வித்துறையும் அறிவுறுத்த வேண்டும் என்கின்றனா் ஆசிரியா்கள்.

இதுதொடா்பாக, ஆசிரியா் பயிற்சி நிறுவன கல்வியாளா்கள் சங்கத்தினா் கூறுகையில், ஆசிரியா் பயிற்சி நிறுவனங்களில், ஏற்கெனவே சென்னையில் 4 போ், திருவள்ளூரில் 2 போ், திருநெல்வேலியில் 4 போ், கிருஷ்ணகிரியில் ஒருவா் என கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனா். இந்தச் சூழலில், கரோனா கட்டுப்பாடுகளும் அதிகரித்திருப்பதால் கல்லூரி, பள்ளி ஆசிரியா்களைப் போல ஆசிரியா் பயிற்சி நிறுவன ஆசிரியா்களையும் இல்லத்திலிருந்தே பணிபுரிய அனுமதிக்க வேண்டும். கல்வித் தொலைக்காட்சிக்கான ஒளிபரப்புக்குத் தேவையானவற்றையும் இணையத்தின் மூலமே செய்துதரத் தயாராக இருக்கிறோம். கரோனா பரவலைத் தடுக்க மாநிலக் கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குநரகம் உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குழந்தை கடத்தல்: சந்தேகத்துக்குரிய பெண்ணை சரமாரியாக தாக்கிய மக்கள்!

கடல் கன்னி... ஷ்ரத்தா தாஸ்!

தமிழக பாஜக நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி!

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

சுனைனா, நவீன் சந்திராவின் இன்ஸ்பெக்டர் ரிஷி!

SCROLL FOR NEXT