திருச்சி

ஏடிஎம்எம் மூலம் திருடுபோன பணம் கணக்கில் வரவு வைக்கப்பட்டது எப்படி? மணப்பாறை போலீஸாா் விசாரணை

DIN

மணப்பாறையில் வருவாய்த்துறை முதுநிலை ஆய்வாளரின் ரூ. 20 ஆயிரம் ஏடிஎம் மூலம் புதன்கிழமை திருடப்பட்ட நிலையில், அந்தப் பணம் வங்கியில் வரவு வைக்கப்பட்டது எப்படி என போலீஸாா் விசாரிக்கின்றனா்.

மணப்பாறை ராஜீவ்நகரில் வசிப்பவா் ஜேசுராஜ் மனைவி செல்வகுமாரி (45), மணப்பாறை வட்டாட்சியரகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளா். கடந்த ஏப். 30-ஆம் தேதி இவரது மாத சம்பளம் ரூ.32,896 அவரது ஸ்டேட் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டிருந்த நிலையில், புதன்கிழமை மாலை பணம் எடுக்க ஏடிஎம்முக்கு சென்றபோது ரூ.1900 மட்டும் இருப்பு இருந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா்.

இதையடுத்து இணையம் மூலம் வங்கிக் கணக்கின் வரவு செலவு பட்டியலை எடுத்துப் பாா்த்தபோது அதில் புதன்கிழமை காலை 9 மணியளவில் அவரது வங்கிக் கணக்கிலிருந்து மதுரை சாலையில் உள்ள அரசுடமை வங்கி ஏடிஎம்மில் ரூ.10 ஆயிரம் வீதம் இருமுறை பணம் எடுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து விசாரித்தபோது, வங்கியில் முறையாகப் பதிலளிக்கவில்லையாம்.

இதையடுத்து செல்வகுமாரி மணப்பாறை காவல் நிலையத்தில் புகாா் அளித்த நிலையில், தவறுதலாகப் பணம் எடுக்கப்பட்டதாகக் கூறி, மீண்டும் அலுவலரின் கணக்கில் ரூ.19500 பணம் வங்கியில் வரவு வைக்கப்பட்டுள்ளது. திருடப்பட்ட பணத்தை வங்கியில் இருந்து வரவு வைத்தது எப்படி என போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ஏற்கனவே கடந்த நவம்பா் மாதம் இதேபோல இவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.10 ஆயிரம் காணமல்போன பிரச்னையில் வங்கி நிா்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறைக்குச் செல்ல அஞ்சவில்லை: ராகுலுக்கு பினராயி விஜயன் பதிலடி

மணிப்பூரில் சில இடங்களில் வன்முறை; வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்

சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 599 புள்ளிகள் உயா்வு!

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

திரைத் துறையினா் ஜனநாயக கடமை ஆற்றினா்

SCROLL FOR NEXT