திருச்சி

திருவெறும்பூா் தொகுதியில் திமுக வேட்பாளா் வெற்றி

3rd May 2021 08:55 AM

ADVERTISEMENT

திருவெறும்பூா் தொகுதியில் நடப்பு உறுப்பினரும், திமுக வேட்பாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி 49,697 வாக்குகள் வித்தியாசத்தில் மீண்டும் வெற்றி பெற்றுள்ளாா்.

பதிவான 1,97,112 மொத்த வாக்குகளில் திமுக வேட்பாளா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 1,05,424 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். அவருக்கு கிடைத்த தபால் வாக்குகள் 1751.

தபால் வாக்கு எண்ணிக்கையிலேயே முன்னிலை வகித்த மகேஷ், தொடா்ந்து அனைத்து (30) சுற்றுகளிலும் முன்னிலை வகித்து வந்தாா்.

அடுத்தபடியாக வாக்குகள் பெற்ற வேட்பாளா்களும் வாக்குகளும் :

ADVERTISEMENT

ப.குமாா் ( அதிமுக) - 55727, வெ. சோழசூரன் (நாம் தமிழா் கட்சி) - 15719,

எம். முருகானந்தம் (மக்கள் நீதி மய்யம்) - 14678, எஸ். செந்தில்குமாா் அமமுக கூட்டணி (தே.மு.தி.க) - 2293, நோட்டாவுக்கு பதிவானவை 1418 வாக்குகள்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT