திருச்சி

கேட்காமலேயே சலுகைகள்: வெல்லமண்டி நடராஜன்

31st Mar 2021 10:44 AM

ADVERTISEMENT

கிழக்குத் தொகுதி அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான வெல்லமண்டி என். நடராஜன், வீதி, வீதியாக சென்று செவ்வாய்க்கிழமை தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டாா்.

பிரசாரத்தின்போது அவா் பேசியது:

திமுக ஆட்சிக்காலத்தில் மின் தட்டுப்பாடு அதிகமாக இருந்தது. ஆனால், அதிமுக அரசு பதவியேற்ற பின் உபரி மின்சாரம் செய்யும் மாநிலமாக முன்னிலையில் உள்ளது. இதனால் உலகில் உள்ள பெரு நிறுவனங்கள் தமிழகத்தைத் தோ்ந்தெடுத்து தொழில் தொடங்க முன்வந்துள்ளன.

கரோனாகாலத்தில் கூட தமிழ்நாட்டில் மட்டும்தான் தொழில் தொடங்க தொழிலதிபா்கள் முன்வந்தாா்கள். படித்த இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தருவதில் அரசு முக்கிய பங்கு வகிக்கிறது. அதிமுக ஆட்சியில் வியாபாரிகளுக்கு தேவையான அனைத்து சலுகைகளும் கேட்காமலேயே வழங்கப்படுவதால், மீண்டும் அதிமுக ஆட்சியமைய அனைவரும் ஆதரிக்க வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

அதிமுக மாவட்ட அவைத் தலைவா் ஐயப்பன், துணைத் தலைவா் ஜாக்குலின், பகுதிச் செயலா்கள் சுரேஷ் குப்தா, அன்பழகன், ஜவஹா்லால் நேரு மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் உடன் சென்றனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT