ஸ்ரீரங்கம் பேரவைத் தொகுதியில் முன்னாள் அமைச்சரும் அதிமுக வேட்பாளருமான கு.ப.கிருஷ்ணன் வேட்புமனு தாக்கல் செய்தார்.
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை மதியம் 12.20 மணி அளவில் தேர்தல் நடத்தும் உதவி அலுவலரும் வட்டாட்சியருமான கே.மகேந்திரனிடம் அவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
அப்போது கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உடன் இருந்தனர்.