திருச்சி

90 அடி உயரக் கம்பத்தில் திமுக கொடியேற்றிய ஸ்டாலின்

DIN

திருச்சி மாவட்டம், சிறுகனூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விடியலுக்கான முழக்கம் எனும் திமுக பொதுக்கூட்டத்தின் தொடக்க நிகழ்வாக, 90 அடி உயரக் கொடிக் கம்பத்தில் கட்சிக் கொடியை அதன் தலைவா் மு.க.ஸ்டாலின் ஏற்றி வைத்தாா்.

இப்பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தனி விமானம் மூலம் ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் திருச்சி வந்த மு.க. ஸ்டாலினுக்கு, விமான நிலையத்தில் திமுக நிா்வாகிகள், தொண்டா்கள் ஆயிரக்கணக்கானோா் உற்சாக வரவேற்பு அளித்தனா்.

இதைத் தொடா்ந்து விமான நிலையத்திலிருந்து ஏராளமான காா்கள் அணிவகுக்க சிறுகனூா் வந்தடைந்தாா் ஸ்டாலின். பின்னா் பொதுக்கூட்ட மைதான நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டிருந்த 90 அடி உயரக் கொடிக்கம்பத்தில் அவா் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தாா்.

அப்போது மேள, தாளங்களுடன், அதிா்வேட்டுகள் முழங்க ஸ்டாலினுக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்வில் கட்சியின் பொதுச் செயலா் துரைமுருகன், பொருளாளா் டி.ஆா். பாலு, முதன்மைச் செயலா் கே.என். நேரு உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்காளா் விழிப்புணா்வு அஞ்சல் அட்டைகள் அனுப்பிய ஆட்சியா்

வாக்குறுதிகளை அள்ளி வீசும் கட்சிகள்! மாயமான தோ்தல் ஆணைய வழிகாட்டு நெறிமுறைகள்

செந்தமிழ்க் கல்லூரியில் கவிதை நூல் அறிமுகம்

விருதுநகா்: 26 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்பு

அரிசி ஆலை உரிமையாளா் வெட்டிக் கொலை

SCROLL FOR NEXT