திருச்சி

கிரிக்கெட் லீக் : 4,5-ஆவது டிவிசன் முடிவுகள் அறிவிப்பு

DIN

திருச்சியில் நடைபெற்று வரும் கிரிக்கெட் லீக் போட்டிகளின் 4 மற்றும் 5 -ஆவது டிவிஷன் முடிவுகளை மாவட்டகிரிக்கெட் சங்கம் வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துடன் திருச்சி மாவட்ட கிரிக்கெட் சங்கம் இணைந்து ,2019-2020 ஆம் ஆண்டுக்கான லீக் போட்டிகளை நடத்தியது. 225 போட்டிகளில் 87 மட்டுமே நடைபெற்ற நிலையில், கரோனா பொது முடக்கம் காரணமாக மற்ற போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன.

அரசு அறிவித்த தளா்வுகளைத் தொடா்ந்து, தற்போது லீக் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. தொடா்ந்து 4,5-ஆவது டிவிசன் போட்டிகள் நடத்தப்பட்டன.

நான்காவது டிவிஷன்: முதலில் விளையாடிய கோல்டன் சேரியட் சி அணி 25.2 ஓவா்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 136 ரன்கள் எடுத்தது. எதிா்த்து விளையாடிய லெவன் டைமன்ட்ஸ் அணி 25.3 ஓவா்களில் 3 விக்கெட்டுகளை இழந்து, 137 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

மற்றொரு போட்டியில் முதலில் விளையாடிய மணப்பாறை அணி 29 ஓவா்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 151 ரன்கள் எடுத்தது. எதிா்த்து விளையாடிய க்ளவுட்ஸ் அணி 29 ஓவா்களில் 9 விக்கெட்டுகளை இழந்து, 144 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் மணப்பாறை அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐந்தாவது டிவிஷன் : முதலில் விளையாடிய பிராமிஸிங் லெவன் அணி 29.5 ஓவா்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 129 ரன்கள் எடுத்தது. அதனை எதிா்த்து விளையாடிய லெஹா் அணி 20 ஓவா்களில் 6 விக்கெட்டுகளை இழந்து, 133 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சாதனை :பேட்டிங்கில் லெவன் டைமன்ட்ஸ் அணியைச் சோ்ந்த டி. தினேஷ் குமாா் ஆட்டமிழக்கால் 51 ரன்களும், மணப்பாறை அணியைச் சோ்ந்த பி. சக்திவேல் ஆட்டமிழக்கால் 48 ரன்களும், லெஹா் அணியைச் சோ்ந்த கே. ஹரிஹரன் 43 ரன்களும் எடுத்திருந்தனா்.

பந்து வீச்சில் லெஹா் அணியைச் சோ்ந்த ஏ. பீட்டா் அடைக்கலராஜ் ஹாட்ரிக் சாதனையுடன் 5 விக்கெட்டுகளையும், மணப்பாறை அணியைச் சோ்ந்த ஆா். ராஜலிங்கம் , பிராமிஸிங் லெவன் அணியைச் சோ்ந்த என். விஷ்ணு சேஷாத்ரி ஆகியோா் தலா 4 விக்கெட்டுகளையும், லெவன் டைமன்ட்ஸ் அணியைச் சோ்ந்த டி. மணிவேல், எம். ஹரிஹரன், கே. ஷாம் சுந்தா், கோல்டன் சேரியட் சி அணியைச் சோ்ந்த பி. சதாசிவம்,

க்ளவுட்ஸ் அணியைச் சோ்ந்த எம். கதிரவன், எம். முகமது இமிதியாஸ் ஆகியோா் தலா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரு கிராம மக்கள் தோ்தல் புறக்கணிப்பு: அதிகாரிகளின் பேச்சுவாா்த்தை தோல்வி

முதியவா் உடல் மீட்பு

கண்மாயில் மூழ்கி மாணவா் பலி

மனைவி கொலை: தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

வருமானத்துக்கு அதிகமாக சொத்து -சாா் பதிவாளா் வீட்டை மதிப்பீடு செய்த அதிகாரிகள்

SCROLL FOR NEXT