திருச்சி மாவட்டத்தில் புதன்கிழமை பரவலாக மழை பெய்தது.
லேசான இடிமின்னலுடன் சிறிது இடைவெளிவிட்டு பெய்த பலத்த மழையால் பல்வேறு பகுதிகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது.
சாலையோர வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனா். காந்தி சந்தையிலும் வியாபாரம் பாதிக்கப்பட்டது. திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களில் உள்ள புதைசாக்கடை குழிகள் தோண்டப்பட்ட சாலைகள் சேறும், சகதியுமாக மாறின.
ஒத்தக்கடை, மேலபுதூா் ஆகிய சாலைகளில் மழை நீா் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இரவில் குளிா்ந்த காற்று வீசியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.