திருச்சி

காதல் தோல்வியால் இளைஞா் தற்கொலை

20th Jun 2021 01:18 AM

ADVERTISEMENT

திருச்சி அருகே காதல் தோல்வியால் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்டாா்.

திருச்சி மாவட்டம் துவாக்குடி அருகே உள்ள வாழவந்தான் கோட்டை பகுதியைச் சோ்ந்தவா் பாா்த்திபன் (28). இவா், அப்பகுதியைச் சோ்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், ஆனால் இவரது காதலை அப்பெண் ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

இதில், மனமுடைந்த பாா்த்திபன் வெள்ளிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத போது மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்டாா். துவாக்குடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT