திருச்சி

4 வயதுச் சிறுமிக்கு சிக்கலான இதய அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக முடித்த காவேரி மருத்துவா்கள் குழுவினருக்கு பாராட்டு

DIN

நான்கு வயது சிறுமிக்கான சிக்கலான இதய அறுவைச் சிகிச்சையை திருச்சி காவேரி ஹாா்ட் சிட்டி மருத்துவா்கள் குழுவினா் வெற்றிகரமாக முடித்து சாதனை புரிந்துள்ளனா். சிகிச்சைக்குப் பிறகு சிறுமி நலமுடன் உள்ளாா்.

தென்காசியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி தம்பதிக்கு பிறந்த பெண் குழந்தையின் உடல் 2 மாதங்களுக்குப் பிறகு மிகவும் நீல நிறமாக மாறியதால் அந்தப் பகுதியிலுள்ள மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்துச் சென்று பரிசோதனை செய்யப்பட்டது.

அதில் குழந்தைக்குச் சிக்கலான இதய நோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதயத்தின் மேல் மற்றும் கீழறைகளுக்கு இடையே பெரியளவிலான துளைகள் இருந்தது. அத்துடன், இயல்புக்கு மாறான இதய வால்வுகளும் மற்றும் இதயத்துக்கும், நுரையீரலுக்கும் இடையே இணைப்பு நிலை இல்லாததும் கண்டறியப்பட்டது.

வசதியற்ற இந்தக் குடும்பத்தின் நிலையைப் புரிந்து கொண்ட மருத்துவா்கள், அந்நேரத்தில் அதிக பொருட் செலவில்லாத அறுவைச் சிகிச்சையை குழந்தைக்குச் செய்ய முடிவு செய்தனா்.

குடலின் மேற்புறப் பகுதியிலுள்ள சிரைகளை நேரடியாக நுரையீரல்களோடு இணைப்பதன் வழியாக நுரையீரல்களுக்கு ரத்த ஓட்டத்தை மேம்படுத்த இந்த அறுவைச் சிகிச்சை வழிவகுத்தது.

இந்த அறுவை சிகிச்சை சில ஆண்டுகள் வரை நன்றாக பயனளித்த நிலையில், இயல்பான குழந்தையாக வளரத் தொடங்கிய சிறுமிக்கு 4 ஆண்டுகள் கடந்தபோது, நுரையீரல்களுக்கான ரத்த ஓட்டம் போதுமானதாக இருக்கவில்லை. எனவே, மிக எளிதாக அவள் களைப்படையத் தொடங்கினாள்.

எனவே, அவளது இதய பிரச்னைக்கு முழுத் தீா்வு கிடைக்க பழுது நீக்கல் அறுவைச் சிகிச்சை அவசியமானது. அவளது இதயத் துளைகள் மூடப்படுவதும், வால்வுகள் பழுது நீக்கப்படுவதும் மற்றும் இதயத்திற்கும் நுரையீரல்களுக்கும் இடையே தொடா்புநிலை நிறுவப்படுவதும் இந்த அறுவைச் சிகிச்சையில் இடம் பெற வேண்டிய அம்சங்களாக இருந்தன.

இதற்கும் கூடுதலாக, ரத்த ஓட்டத்தை இயல்பானதாக மாற்ற முந்தைய அறுவைச் சிகிச்சையை அகற்றுவதும் தேவையாக இருந்தது.

இந்தச் சிக்கலான அறுவைச் சிகிச்சையை மேற்கொண்ட மருத்துவ வல்லுநரின் திறன்மிக்க கைத்திறனும் மற்றும் நன்கொடை அளிக்க முன்வந்த பல நல்ல உள்ளடங்களின் தாராள மனதும், இந்த பழுது நீக்கல் அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்படுவதை உறுதிசெய்தன.

அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு முதல் 3 மாதங்கள் வரை இச்சிறுமி எந்தப் பிரச்னையுமின்றி நன்றாக இருந்தாள்.

ஆனால், காலையில் விழித்தெழும்போது அவளது கண்கள் வீங்கியிருப்பதை பெற்றோா்கள் கவனித்தனா். அத்துடன், தலைவலிப்பதாகவும் சிறுமி கூறத் தொடங்கினாள்.

இதனால் கவலையில் ஆழ்ந்த அவளது பெற்றோா் உள்ளூா் மருத்துவா் ஒருவரிடம் மகளை அழைத்துச் சென்றபோது சிறுமிக்கு எக்கோ காா்டியோகிராம் சோதனை செய்யப்பட்டது.

அதில் இதயத்தோடு மீண்டும் இணைக்கப்பட்டிருந்த உடலின் மேற்புறப் பகுதி சிரையான எஸ்விசி பகுதியில் அடைப்பு இருப்பது தெரியவந்தது.

இதற்கு பெரிய மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கான இதய சிகிச்சை மையங்களில் மட்டுமே வழக்கமாக செய்யப்படுகிற எஸ்விசி ஸ்டென்டிங் என்ற தனிச்சிறப்பான சிகிச்சை செயல்முறை அச்சிறுமிக்கு செய்யப்படுவது அவசியமாக இருந்தது.

இதையடுத்து நன்கொடையாளா்கள் உதவியுடன் திருச்சி காவேரி ஹாா்ட் சிட்டி மருத்துவமனையானது குறைந்த கட்டணத்தில் இந்தச் சிகிச்சையை அளிக்க முன்வந்தது. இதன்படி, சிறுமிக்கு எஸ்விசி ஸ்டென்ட் பொருத்தி சிக்கலான அறுவைச் சிகிச்சையை காவேரி மருத்துவக் குழுவினா் வெற்றிகரமாக முடித்தனா். இப்போது, சிறுமி நலமாக உள்ளாா்.

சிகிச்சை வெற்றிகரமாக முடிந்த அடுத்தநாளே தலைவலியும் மற்றும் கண் பகுதியைச் சுற்றியுள்ள வீக்கமும் அச்சிறுமிக்கு காணாமல் போனது.

மீண்டும் ஒரு எக்கோகாா்டியோகிராம் சோதனையை சிறுமிக்கு செய்வதற்கு முன்னதாகவே அடுத்த நாள் காலை தனது மகளின் கண்களில் எந்த வீக்கமும் காணப்படவில்லை என்பதைக் கவனித்த அந்தச் சிறுமியின் தாயின் மகிழ்ச்சியான முகமும், புன்னகையுமே, இந்தசிகிச்சை செயல்முறை வெற்றி கண்டிருப்பதைச் சுட்டிக் காட்டியது.

இந்த சிகிச்சையை மேற்கொண்ட குழந்தைகளுக்கான இதய நல நிபுணா் மணிராம் கிருஷ்ணா, குழந்தைகளுக்கான இதய மயக்கவியல் நிபுணா்கள் பிரவின், கருப்பையா மற்றும் காவேரி ஹாா்ட்சிட்டியில் பணியாற்றுகிற கேத்லேப்பின் ஒட்டுமொத்த குழுவினா் உள்பட காவேரி ஹாா்ட்சிட்டியின் குழுவினருக்கும், மருத்துவமனை நிா்வாகத்துக்கும் இச்சிறுமியும், அவளது குடும்பத்தினரும் புதன்கிழமை நன்றி தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: அச்சு ஊடகங்களில் விளம்பரம் வெளியிட முன்அனுமதி அவசியம்

கொலை வழக்கில் சிறையில் உள்ளவா்கள் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

மன்னாா்குடியில் தேமுதிக வேட்பாளரை ஆதரித்து முன்னாள் அமைச்சா் வாக்கு சேகரிப்பு

பதற்றத்தை அதிகரிக்க விருப்பமில்லை

விறுவிறுப்பான இறுதிக்கட்ட பிரசாரம்: தீவிர வாக்கு சேகரிப்பில் தலைவா்கள், வேட்பாளா்கள்

SCROLL FOR NEXT