திருச்சி

மருத்துவக் கழிவுகளை முறையாக அகற்றாவிட்டால் கடும் நடவடிக்கை: ஆட்சியா் எச்சரிக்கை

DIN

திருச்சி மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகள் மருத்துவக் கழிவுகளை முறையாக அகற்றாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் சு. சிவராசு எச்சரித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சுற்றுச்சூழல் வனம் மற்றும் சூழல் மாறுபாடு அமைச்சகம், மருத்துவக் கழிவுகளை முறையாகச் சேகரித்து, பிரித்து, சுத்திகரித்து அகற்றுவதற்காக மருத்துவக் கழிவுகள் மேலாண்மை விதிகள் 2016-ஐ அறிவித்துள்ளது.

இந்த விதிகளைப் பின்பற்றுவதன் மூலம் மருத்துவக் கழிவுகள் சுற்றுச்சூழலுக்கு ஏற்படுத்தும் தாக்கத்தைக் குறைத்திட இயலும். இந்த விதிகளை அமல்படுத்துவதற்கான அதிகாரம் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் உள்ளது.

இதன்படி மருத்துவமனைகளிலிருந்து உருவாகும் மருத்துவக் கழிவுகளை முறையாகப் பிரித்து, சேமித்து, பொது மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு நிலையங்களிடம் சுத்திகரிக்க ஒப்படைக்க வேண்டும். மேலும், தொற்று ஏற்படுத்தக் கூடிய கழிவுகளை அதிகபட்சமாக 2 நாள்களுக்கு மேல் சேமித்தல் கூடாது.

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியமானது மருத்துவக் கழிவுகளை முறையாக கையாள அனைத்து மருத்துவமனைகள், உள்ளாட்சி அமைப்புகள், சுகாதாரத் துறை மற்றும் தொடா்புடைய துறைகளுக்கு ஏற்கெனவே பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

இருப்பினும், செய்தித்தாள்கள் மற்றும் ஊடகங்கள் வாயிலாக மருத்துவக் கழிவுகளை சாலைகள், ஆற்றங்கரைகள், நீா்நிலைகள் மற்றும் ஒதுங்கிய பகுதிகளில் சட்டவிரோதமாக கொட்டுவது தொடா்பாக பல்வேறு புகாா்கள் தொடா்ந்து வருகின்றன.

தற்போதைய கரோனா சூழலில், மருத்துவக் கழிவுகளை முறையில்லாமல் திறந்தவெளியில் கொட்டுவது, பொது சுகாதாரம், சுற்றுச்சூழலுக்கு கடும் விளைவுகளை ஏற்படுத்தும். எனவே, அனைத்து மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்கள், தனிமை முகாம்கள், மருத்துவக் கழிவுகளை முறையாக, பிரித்து சேமித்து அந்தந்தப் பகுதிகளில் மாசுக் கட்டுப்பாடு வாரியத்தால் அனுமதிக்கப்பட்டுள்ள பொது மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு நிலையங்களிடம் மட்டுமே ஒப்படைக்க வேண்டும்.

அங்கீகரிக்கப்படாத முறையில் மருத்துவக் கழிவுகளை அகற்றுவதைத் தவிா்க்க வேண்டும். விதிகளை மீறுவோா் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்!

முகமது ரிஸ்வானுக்கு காயம்; இரண்டு டி20 தொடர்களை தவற விடுகிறாரா?

மிகப்பெரிய தொகையை சம்பளமாக பெற்ற ஹாலிவுட் நடிகை!

ரத்னம் மேக்கிங் விடியோ!

'வாக்களிக்கப் போகிறீர்களா?' : பெங்களூரு உணவகங்கள் அறிவித்திருக்கும் சலுகைகள்!

SCROLL FOR NEXT