திருச்சி

உய்யகொண்டான் உபரி நீர் வாய்க்கால் தூர்வாரும் பணி: முதல்வர் ஆய்வு    

11th Jun 2021 04:47 PM

ADVERTISEMENT

திருச்சிக்கு வெள்ளிக்கிழமை வருகை தந்த முதல்வர் மு.க. ஸ்டாலின், உய்யகொண்டான் உபரி நீர் வாய்க்காலில் தூர்வாரும் பணியை ஆய்வு செய்தார். 
மேட்டூர் அணை திறக்கப்படும் முன்பாக காவிரி, டெல்டா பகுதிகளில் தூர்வாரும் பணிகளை முதல்வர் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார். திருச்சியில் பிரசித்தி பெற்றதும், வரலாற்று சிறப்பு மிக்கதுமான உய்யக்கொண்டான் வாய்க்கால் தூர்வாரும் பணியை பார்வையிட்டார். குழுமணி அருகே புலிவலம் எனும் இடத்தில் ராணி மங்கம்மாள் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட மணற்போக்கி உள்ளது. 

இதன் அருகிலேயே 2010ஆம் ஆண்டு புதிய மணற்போக்கி கட்டப்பட்டுள்ளது. இந்த மணற்போக்கியானது உய்யக்கொண்டான் வாய்க்கால் உபரி நீர் வெள்ளம் அடித்து செல்லும் போது, நகரப்பகுதிகளில் செல்வதை தடுக்கவும் வயல்வெளிகள், தோட்டங்களில் புகுந்து பயிர்களை நாசம் படுத்துவதை தடுக்கவும் வடிகாலாக அமைந்துள்ளது. 
இந்த வாய்க்காலில் புலிவலம் தொடங்கி கொடிங்கால் வரை 1,200 மீட்டர் தொலைவிற்கு முட்புதர்கள் மண்டியும், மணல் மேடிட்டு தண்ணீர் செல்ல முடியாமல் இருந்தது. இதனை ரூ.77 லட்சம் மதிப்பில் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. புலிவலத்தில் வெள்ளிக்கிழமை இந்த பணிகளை பார்வையிட்ட முதல்வர் மு.க. ஸ்டாலின், பொதுப்பணித்துறை பொறியாளர்களிடம் பணிகளின் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்தார். 

ADVERTISEMENT

பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று கூறினார். இந்த ஆய்வின் போது, ஆட்சியர் சு.சிவராசு, அமைச்சர்கள் கே.என். நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் எம்எல்ஏக்கள், அரசு அலுவலர்கள், பொதுப்பணித்துறை பொறியாளர்கள் உடனிருந்தனர்.

Tags : Chief Minister Stalin
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT