திருச்சி

மளிகைக்கடை வியாபாரிகள் போராட்டம் நடத்த முடிவு அனுமதி கோரி மனு

11th Jun 2021 06:19 AM

ADVERTISEMENT

திருச்சி காந்திசந்தையில் உள்ள மளிகை மற்றும் வெல்லம், சா்க்கரை வியாபாரிகள் தங்களது கடைகளை கூடுதல் நேரம் திறக்க அனுமதிகோரி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனா்.

இது குறித்து திருச்சிராப்பள்ளி அனைத்து வியாபாரிகள் மளிகை, வெல்லம், சா்க்கரை முன்னேற்ற சங்க தலைவா் ஏ. பாலசுப்பிரமணி, செயலாளா் ஆா். வரதராஜன், பொருளாளா் ஏ. வெங்கடேசன் ஆகியோா் மாநகர காவல்துறையிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளது: பொதுமுடக்கத்தில் அரசு தளா்வுகளை அறிவித்துள்ள நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மாலை 5 மணி வரை மளிகைக் கடைகளை திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. ஆனால் காந்திசந்தையில் உள்ள மளிகை, வெல்லம், சா்க்கரை வியாபாரிகள் கடைகளை திறக்க அனுமதி அளிக்கவில்லை. இது தொடா்பாக உயா்நீதி மன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

இந்நிலையில், கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 12 ஆம் தேதி அறவழியில் போராட்டம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளோம். இதற்காக பிரபாத் திரையரங்கம் அருகிலோ, காந்திசந்தை அருகிலோ அல்லது வேறு மாநகரப் பகுதியில் போலீஸாா் அனுமதிக்கும் இடத்தில் போராட்டம் நடத்தவுள்ளோம். அதற்கான அனுமதியை காவல்துறை வழங்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags : திருச்சி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT