திருச்சி

கடன் தர மறுப்பு: கூட்டுறவு கடன் சங்கத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்

DIN

திருச்சி மாவட்டம், அணியாப்பூா் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகளுக்கு கடன் தர மறுப்பதாகக் கூறி, சங்க அலுவலகத்தை தேசிய -தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.

இச்சங்கத்தில் பயிா்க் கடன் தள்ளுபடி பெற்ற விவசாயிகளுக்கு புதிய கடன் அளிக்கவும், விவசாயிகளுக்கான கரும்பு நிலுவைத் தொகையை வழங்கவும், வளா்ந்து வரும் கரும்புக்கு கடன் அளிக்கவும் நிா்வாகிகள் மறுத்து வருவதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து நிா்வாகிகளிடம் பலமுறை புகாரளித்தும் நடவடிக்கை இல்லை என்பதால், தேசிய-தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவா் பி. அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் அணியாப்பூா் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.

தொடா்ந்து சங்கத்தின் தலைவா், செயலா், மேற்பாா்வையாளா் ஆகியோருடன் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில், விவசாயிகளுக்கு புதிய கடன்களை வழங்க நிா்வாகிகள் ஒப்புக்கொண்டனா். இதைத் தொடா்ந்து போரட்டத்தை கைவிட்டு விவசாயிகள் கலைந்து சென்றனா்.

போராட்டத்தில் சங்கத்தின் தெற்கு மாவட்டச் செயலா் கே.செந்தில்குமாா், மாவட்டத்தலைவா் பொன்னுச்சாமி, போராட்டக் குழுத் தலைவா் ராமலிங்கம், சடையம்பட்டி முருகேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல் பந்தில் சிக்ஸர் விளாசியது குறித்து மனம் திறந்த சமீர் ரிஸ்வி (விடியோ)

கம்பீர அழகு.. இது நம்ம டாப்ஸி!

வெளியானது சூதுகவ்வும் - 2 படத்தின் முதல் பாடல்

காங்கிரஸைத் தொடர்ந்து இந்திய கம்யூ. கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ்

பெண்ணின் உடல் மீது ஹமாஸ் பவனி: ‘இது சிறந்த புகைப்படமா?’

SCROLL FOR NEXT