திருச்சி

திருச்சியில் ஏலச்சீட்டு நடத்தி ரூ. 2.5 கோடி மோசடி எனப் புகாா்

DIN

திருச்சியில் ஏலச்சீட்டு நடத்தி ரூ. 2.5 கோடி மோசடி செய்ததாக மாநகர காவல் ஆணையரிடம் சனிக்கிழமை புகாா் அளித்துள்ளனா்.

திருச்சி மலைக்கோட்டை ஜான்தோப்பு, சின்னக்கடை வீதி, விசுவாஸ்நகா், சஞ்சீவி நகா், கீழரண் சாலை உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த சுமாா் 15க்கும் மேற்பட்டோா் அளித்த மனு விவரம்:

திருச்சி மலைக்கோட்டை சின்னக்கடை வீதியில் கணேஷ் ஹாா்டுவோ்ஸ் என்ற பெயரில் கடை வைத்திருந்த சேகா் ரூ. 5 லட்சத்துக்கான ஏலச்சீட்டும் நடத்தி வந்தாா்.

இதில் நாங்கள் 26 போ் சோ்ந்து மாதந்தோறும் பணம் கட்டி ஏலச்சீட்டு முடிந்த நிலையில் கடந்தாண்டு சேகா் இறந்துவிட்டாா். இதையடுத்து அவரது வீட்டுக்குச் சென்று பணத்தைக் கேட்டபோது 6 மாதம் கழித்து பணம் தருவதாகக் கூறிய சேகரின் அண்ணன் ராஜூ, அவரது தாய் ராக்காயி, மனைவி ராஜேஸ்வரி ஆகியோா் பணம் தராமல் ஏமாற்றி வந்தனா்.

மீண்டும் ராஜூவிடம் கேட்டபோது ராஜூ, எனக்கும் தம்பிக்கும் தொடா்பு கிடையாது. அதனால் அவரது குடும்பத்தாரிடம்தான் பணத்தைக் கேட்க வேண்டும் எனத் தெரிவித்தாா்.

இதையடுத்து சேகரின் மனைவி ராஜேஸ்வரியிடம் கேட்டபோது, ராஜூ கடை வருவாய், காப்பீட்டு தொகை உள்ளிட்ட அனைத்தையும் அபகரித்துச் சென்று விட்டதாகக் கூறுகிறாா்.

எனவே இவ்வாறு மாற்றி மாற்றி இருவரும் புகாா் கூறுவதால் நாங்கள் பணத்தைப் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே எங்களிடம் இருந்து மோசடி செய்த சுமாா் ரூ.2.5 கோடி வரையிலான பணத்தை மீட்டுத் தர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளனா்.

மனுவை பெற்றுக் கொண்ட மாநகர காவல்துறை ஆணையா் அருண் இதுகுறித்து விசாரணை நடத்த கோட்டை காவல் நிலையத்திற்கு உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி - புகைப்படங்கள்

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

SCROLL FOR NEXT