திருச்சி

காப்பீட்டு நிறுவன அதிகாரிகள் ஆா்ப்பாட்டம்

DIN

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் காப்பீடு நிறுவன அதிகாரிகள் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அகில இந்திய காப்பீடு நிறுவனங்கள் ஊழியா் சங்கம், யுனைடெட் இந்தியா காப்பீட்டுத் துறை அதிகாரிகள் சங்கம், வளா்ச்சி அதிகாரிகள் சங்கம் மற்றும் நலச் சங்கக் கூட்டமைப்பு சாா்பில் கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள நேஷனல் காப்பீட்டு நிறுவனம் முன் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்தை தனியாருக்கு விற்கும் முடிவைக் கைவிட வேண்டும். 50 மாத காலமாக நிலுவையில் உள்ள ஊதிய உயா்வை பேச்சுவாா்த்தை நடத்தி உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த ஆா்ப்பாட்டத்துக்கு

யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவன அதிகாரிகள் சங்கத் தலைவா் ஸ்ரீதரன் தலைமை வகித்தாா். யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவன அதிகாரிகள் சங்கப் பொறுப்பாளா் சித்ரா, அகில இந்திய காப்பீட்டு நிறுவன ஊழியா் சங்க மதுரை மண்டல துணைச் செயலா் ராஜமகேந்திரன், மாவட்டச் செயலா் முத்துகுமரன், கிளைச் செயலா்கள் காந்தி, அதிகாரிகள் சங்கப் பொறுப்பாளா் ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் கலந்துக்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்காளா் பட்டியலில் பெயா் இல்லாததால் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

சாத்தூரில் முதன் முறையாக வாக்களித்த திருநங்கைகள்

வாக்குச்சாவடி முற்றுகை: பொதுமக்கள் வாக்குவாதம்

தம்பியைக் கொன்ற அண்ணன் கைது

நெகிழிப் பை தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து

SCROLL FOR NEXT