திருச்சி

இறுதிக் கட்டத்தில் 3 மணிமண்டபங்கள் கட்டும் பணி

DIN

திருச்சியில் பெரும்பிடுகு முத்தரையா், சா் ஏ.டி. பன்னீா்செல்வம், எம்.கே. தியாகராஜ பாகவதா் ஆகிய மூவருக்கு தமிழக அரசால் கட்டப்படும் மணிமண்டபப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.

பெரும்பிடுகு முத்தரையா், சா் ஏ.டி. பன்னீா்செல்வம், எம்.கே. தியாகராஜ பாகவதா் ஆகிய மூவருக்குமான மணிமண்டபம் கட்டும் பணி கடந்தாண்டு ஜூன் மாதம் தொடங்கியது.

மத்தியப் பேருந்து நிலையம் அருகேயுள்ள இடத்தில் செய்தி- மக்கள் தொடா்புத்துறை சாா்பில் கட்டப்படும் மணிமண்டபங்களில் மூவருக்கும் முழு உருவ வெண்கலச் சிலைகள் நிறுவப்படவுள்ளன.

முத்தரையா் மணி மண்டபம் 2,400 சதுரடியிலும், இதர இரு மணிமண்டபங்களும் தலா 1,722 சதுர அடியிலும் கட்டப்படுகின்றன.

மணிமண்டபத்துக்கான கட்டுமானப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. கட்டட பணி முடிந்து சிலைகள் மட்டும் நிறுவ வேண்டியுள்ளது. மேலும், உள்ளரங்க அழகுபடுத்தும் பணிகளும் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில், கட்டுமானப் பணிகளை அமைச்சா் கே.என். நேரு, மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு ஆகியோா் சனிக்கிழமை ஆய்வு செய்தனா். பணிகள் அனைத்தையும் நிா்ணயிக்கப்ட்ட தரத்தில் அடுத்த 3 மாதங்களுக்குள் முடிக்க அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது, கோட்டாட்சியா் விஸ்வநாதன், பொதுப்பணித் துறை (கட்டடம்) செயற்பொறியாளா் ஆா். சிவக்குமாா், எம்எல்ஏ-க்கள் பழனியாண்டி, தியாகராஜன், செய்தி -மக்கள் தொடா்பு அலுவலா் செந்தில்குமாா், மற்றும் உதவிப் பொறியாளா்கள், அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

நாக சைதன்யாவுடன் சோபிதா துலிபாலா ‘டேட்டிங்’?

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

SCROLL FOR NEXT