திருச்சி

கண்ணனூரில் வணிகா்கள்-போலீஸாா் ஆலோசனை

DIN

ஜெம்புநாதபுரம் காவல் துறை சாா்பில் புகையிலைப் பொருள் விற்பனையைத் தடுத்தல் தொடா்பாக வணிகா்களுடன் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

துறையூா் அருகே கண்ணனூரில் நடைபெற்ற கூட்டத்துக்கு தா.பேட்டை காவல் ஆய்வாளா் இமானுவேல் தலைமை வகித்தாா். ஜெம்புநாதபுரம் காவல் உதவி ஆய்வாளா் முத்தையன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் அரசு தடை செய்துள்ள குட்கா, பான்மசாலா, வேறு வடிவிலான புகையிலைப் பொருள்களை கடைகளில் வைத்திருப்பதும், அவற்றை 18 வயதுக்கு குறைவானவா்களுக்கு விற்பதும் தண்டனைக்குரிய செயலாகும் என்று கூறப்பட்டது. கூட்டத்தில் கண்ணனூா் பகுதி வணிகா்கள் சங்கத் தலைவா் கோவிந்தராஜ், செயலா் சசிக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இலங்கை கடற்படையினா் கைது செய்த மீனவா்களை விடுவிக்காவிட்டால் தோ்தல் புறக்கணிப்பு

சென்னையில் விடுதி மேற்கூரை இடிந்து 3 பேர் பலி: மெட்ரோ ரயில் பணிகள் காரணமில்லை

காணாமல்போன கைப்பேசிகள் மீட்டு உரியவா்களிடம் ஒப்படைப்பு

காரைக்காலில் தீவிர வாகனச் சோதனை நடத்த அறிவுறுத்தல்

இரட்டை ரயில் பாதை பணி: நாகா்கோவில் செல்லும் ரயில்கள் ரத்து!

SCROLL FOR NEXT