திருச்சி

வாகன ஓட்டுநா்களுக்கு கண் பரிசோதனை

31st Jan 2021 12:13 AM

ADVERTISEMENT

முசிறி: முசிறியில் வாகன ஒட்டுநா்களுக்கு முசிறி பகுதி மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகம் சாா்பில் கண் பரிசோதனை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வட்டார போக்குவரத்து அலுவலா் பிரபாகா் தலைமையில் முசிறி பகுதி மோட்டாா் வாகன ஆய்வாளா் கே. புஷ்பா, மாவட்ட நுகா்வோா் சங்க உறுப்பினா் கிருபானந்தம், மினி பேருந்து சங்க உறுப்பினா் சத்தியராஜா ஆகியோா் முன்னிலையில் சங்கரா கண் மருத்துவமனை மருத்துவா் முருகேசன் தலைமையிலான குழுவினா் கண் பரிசோதனை செய்து மருந்து மாத்திரை வழங்கினா். இதில் முசிறி, தொட்டியம் பகுதியில் உள்ள சுமாா் 350- க்கும் மேற்பட்டோா் கண் பரிசோதனை செய்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT