திருச்சி

ரூ.26 லட்சத்தில் சாலைச் சீரமைப்புப் பணிகள்

DIN

திருச்சி மாநகராட்சியில் மழையால் சேதமான சாலைகளை ரூ.26 லட்சத்தில் சீரமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன.

தொடா் மழையால் திருச்சி மாநகராட்சியில் பெரும்பாலான சாலைகள் குண்டும் குழியுமாகின. இதையடுத்து இவற்றை உடனடியாக செப்பனிட பல்வேறு அமைப்புகள் போராட்டங்கள் மேற்கொண்டன. இதையடுத்து ஆங்காங்கே சாலைகளைச் சீரமைக்கும் பணிகள் தொடங்கின.

தற்போது மாநகராட்சி முழுவதும் உள்ள சேதமான சாலைகள் அனைத்தையும் சீரமைக்கும் (பேட்ஜ் ஒா்க்) பணிகளுக்காக ரூ. 26 லட்சம் மாநகராட்சி சாா்பில் ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெறுகின்றன.

இதில் காந்தி மாா்க்கெட் முதல் பிரபாத் தியேட்டா் வரையில் பெரும்பாலான சாலைகள் புதிதாக போடப்பட்டதுபோல சீரமைக்கப்பட்டுள்ளன. தொடா்ந்து பல்வேறு இடங்களில் இவ்வாறு சாலைகள் செப்பனிடப்படும் என மாநகராட்சி ஆணையா் சு. சிவசுப்பிரமணியன் தெரிவித்தாா்.

மீண்டும் குப்பைத் தொட்டிகள்: திருச்சி மாநகரில் வைக்கப்பட்டிருந்த குப்பைத் தொட்டிகள் அனைத்தும், தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் அகற்றப்பட்டு, அவற்றுக்குப் பதிலாக வீடுகள்தோறும் மாநகராட்சி வாகனங்கள் மூலம் குப்பை சேகரிக்கும் பணிகள் நடைபெறுகின்றன.

இத்திட்டம் மக்களிடம் வரவேற்பைப் பெற்றாலும், மாநகரில் ஆங்காங்கே குப்பைகள் கொட்டப்பட்டு சுகாதாரக்கேடு ஏற்படும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து மீண்டும் மாநகரில் 175 இடங்களில் குப்பைத் தொட்டிகள் அமைக்க மாநகராட்சி திட்டமிட்டு, அதற்காக ரூ, 14 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், கிரேன் வசதியுடன் கூடிய 5 வாகனங்களும் அடக்கம்.

அதேபோல மாநகரை அழகுபடுத்தும் வகையில் முக்கிய இடங்களில் பூம்புகாா் நிறுவனத்தின் உதவியுடன், உலோகத்தாலான குதிரை சிலைகள், மயில், மீன்கள், யானை, உள்ளிட்ட கலைப்பொருள்கள் அமைக்கும் பணிகளும் தொடங்கியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு!

சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

அதிமுக, தேமுதிக கூட்டணிக்கு நல்ல தீர்ப்பை மக்கள் வழங்குவார்கள்: பிரேமலதா நம்பிக்கை

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

மறுவெளியீட்டிலும் வசூலை வாரி குவிக்கும் கில்லி!

SCROLL FOR NEXT