திருச்சி

மொழிப்போர் தியாகிகள் நினைவு தினம்: திருச்சியில் கட்சியினர் மரியாதை

DIN

மொழிப்போர் தியாகிகள் நினைவு தினத்தையொட்டி திருச்சி தென்னூரில் உள்ள நினைவிடத்தில் பல்வேறு கட்சியினர் இன்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். 
ஹிந்தி முறையை எதிர்த்து உயிர்நீத்த மொழிப்போர் தியாகிகள் ஆன கீழப்பழூர் சின்னச்சாமி, விராலிமலை சண்முகம் ஆகியோர் நினைவிடம் திருச்சி தென்னூர் அண்ணாநகர் பகுதியில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் ஜனவரி 25ஆம் தேதி மொழிப்போர் தியாகிகள் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 
இன்று மொழிப்போர் தியாகிகள் தினத்தை முன்னிட்டு பல்வேறு கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலையிலிருந்து அதிமுகவினர்  ஊர்வலமாக சென்று  
மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து, மரியாதை செலுத்தினர்.
 இதில், சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வளர்மதி, அதிமுக மாவட்ட செயலர்கள் மு. பரஞ்சோதி ப. குமார், மாநகர் மாவட்ட மாணவரணி செயலாளர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
இதேபோல திமுக மதிமுக விடுதலைச் சிறுத்தைகள் தேமுதிக உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பங்கள் தரும் வேலாயுதன்

ரத்னம் படத்தின் 2வது பாடல்!

அமர் சிங் சம்கிலா படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

கேஜரிவால் கைது: இந்தியாவில் தேர்தல் நியாயமாக, சுதந்திரமாக நடக்கும் என நம்புகிறோம்: ஐ.நா.

திருமால் உருகிப் போற்றிய திருமேற்றளி கோயில்

SCROLL FOR NEXT