திருச்சி

துறையூர் நீதிமன்றத்தில் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு

DIN

துறையூர் நீதிமன்றங்களில் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

திருச்சி மாவட்டம், துறையூர் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற அறையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட உரிமையியல் நீதிபதி வி. ஆறுமுகம் தலைமை வகித்து பேசியது, 1950-ஆம் வருடம் ஜனவரி 25-ஆம் நாள் தேர்தல் ஆணையம் ஏற்படுத்தப்பட்டது. இதனையொட்டி 2011 முதல் தேசிய வாக்காளர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு தேர்தலிலும் இளம் வாக்காளர்கள் அதிகளவில் பங்கேற்க செய்ய வேண்டும் என்ற வகையில் தேசிய வாக்காளர் தினத்தில் உறுதிமொழி எடுக்கப்படுகிறது. 

உலகில் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் அதிக வாக்காளர்கள் இருந்தும் ஒவ்வொரு தேர்தலிலும் குறைந்த வாக்காளர்கள் வாக்களிப்பதால் தேர்ந்தெடுக்கப்படும் அரசுதான் ஆட்சி அமைக்கிறது. அரசியல் பற்றி அதிகம் பேசாத வாக்காளர்களே தேர்தலில் ஆர்வமாக வாக்களிக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. வாக்காளர்கள் அனைவரும் 100% வாக்களித்து அமைகின்ற அரசு மக்களுக்கான நல்ல அரசாக இருக்கும் என்பதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது நம் அனைவரின் கடமையாகும் என்றார்.

இதனையடுத்து தேசிய வாக்காளர் தின உறுதிமொழியை உரிமையியல் நீதிபதி வாசித்தார். அதனைப் பின்பற்றி சார்பு நீதிமன்றம் மற்றும் உரிமையில் நீதிமன்றப் பணியாளர்கள், வழக்குரைஞர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். இதேபோல் குற்றவியல் நீதித்துறை நடுவர் வி. புவியரசு அறையில் குற்றவியல் நீதிமன்ற பணியாளர்கள் வழக்குரைஞர்கள் வாக்காளர் தின உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

SCROLL FOR NEXT