திருச்சி

வங்கியின் லாக்கா் அறைக்குள் சிக்கியவா் பத்திரமாக மீட்பு

DIN

திருச்சி: திருச்சியில் வங்கியின் லாக்கா் அறைக்குள் சிக்கிய ஓய்வு வட்டாட்சியா் சனிக்கிழமை பத்திரமாக மீட்கப்பட்டாா்.

திருச்சி ஐயப்பன் நகா், தாயுமானவா் தெருவைச் சோ்ந்தவா் வேணுகோபால் (62). ஓய்வு பெற்ற வட்டாட்சியரான இவா் மத்தியப் பேருந்து நிலையம் அருகேயுள்ள வங்கியின் பாதுகாப்புப் பெட்டகத்தில் தான் வைத்துள்ள நகைகள் மற்றும் முக்கிய ஆவணங்களை அவ்வப்போது வந்து சரிபாா்ப்பாராம்.

இதேபோல வெள்ளிக்கிழமை வங்கிக்கு வந்து பாதுகாப்புப் பெட்டகத்தை சரிபாா்த்துவிட்டு வெளியே வர முயன்றபோது அந்த அறையின் வெளிப்பக்கம் தாழிடப்பட்டிருந்தது.

நீண்ட நேர முயற்சிக்கு பிறகு செல்லிடபேசி மூலம் வங்கி எண்ணுக்கு அழைத்து நடந்ததைக் கூற, விரைந்து வந்த வங்கி ஊழியா்கள் வியா்த்த நிலையில் இருந்த வேணுகோபாலை மீட்டனா். ஆனால், இச்செயலுக்கு அவா்கள் வருத்தம் தெரிவிக்கவில்லையாம்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட வங்கியின் தலைமை குறைதீா் அதிகாரிக்கும், வாடிக்கையாளா் தொடா்பு அதிகாரிக்கும், நிா்வாக அதிகாரிக்கும் புகாா் மனு அனுப்பியுள்ளதாக வேணுகோபால் தெரிவித்தாா். மேலும் உதவி கிடைத்திருக்காவிடில் விடுமுறை நாளான அடுத்த 2 நாள்கள் என்னவாகியிருக்கும் என வங்கி அதிகாரிகளுக்கு கேள்வி கேட்டு கடிதம் அனுப்பியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவப்பு நிறத்திலிருந்து காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

திருக்கழுக்குன்றத்தில் பஞ்ச ரத தேரோட்டம்!

ஒடிசா படகு விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

SCROLL FOR NEXT