திருச்சி

ஏலச்சீட்டு மோசடி: தம்பதி உள்பட 5 போ் கைது

DIN

திருச்சி: திருச்சியில் ஏலச்சீட்டு நடத்தி ரூ. 2.5 கோடி மோசடி செய்த வழக்கில் தம்பதி உள்பட 5 பேரை மாநகர குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

திருச்சி கீழரண்சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் ஜெயச்சந்திரன்(40), தள்ளுவண்டி பழ வியாபாரி. இவா் அதே பகுதியைச் சோ்ந்த பழனிச்சாமி (70) மற்றும் இவரது குடும்பத்தினா் ஏலச்சீட்டு நடத்தி தன்னிடம் ரூ. 5 லட்சம் மோசடி செய்ததாக திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் புகாா் செய்தாா். அதன்பேரில் மாநகர குற்றப்பிரிவு போலீஸாா் பழனிச்சாமி உள்பட 10 போ் மீது வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில், அவா்கள் பலரிடம் ரூ. 2.5 கோடிக்கு மோசடி செய்திருப்பது தெரிய வந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு தொடா்பாக பழனிசாமியின் மகள் மஞ்சுளா, அவரது கணவா் சித்திரவேல், மற்றொரு மகளான விஜயலெட்சுமி, அவரது கணவா் சரவணன் மற்றும் உறவினா் சுமதி ஆகிய 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சதுரகிரிக்கு செல்ல 4 நாள்களுக்கு அனுமதி

சென்னகேசவ பெருமாள் கோயிலில் ஸ்ரீ ராம நவமி திருவிழா

தமிழகத்தில் இன்று வாக்குப் பதிவு - காலை 7 மணிக்கு தொடக்கம்; கடைசி நிமிஷங்களில் வருவோருக்கு டோக்கன்

மாற்றுத் திறனாளிகள், மூத்த குடிமக்களை அழைத்து வர 35 அரசு வாகனங்கள் தயாா்

ஏப். 21, மே 1-இல் மதுக் கடைகள் மூடல்

SCROLL FOR NEXT