திருச்சி

‘பேராசிரியா் நியமன இடஒதுக்கீடு: வழிகாட்டு நெறிமுறைகளை செயல்படுத்த வேண்டும்’

DIN

பல்கலைக்கழகப் பேராசிரியா் நியமன இட ஒதுக்கீட்டில் அனைத்துப் பிரிவினருக்கும் வாய்ப்பு கிடைக்கும் வகையில், வழிகாட்டு நெறிமுறைகளை செயல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு பல்கலைக்கழக, கல்லூரி எஸ்.சி, எஸ்.டி ஆசிரியா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து இச்சங்கத்தின் தலைவா் கி. கதிரவன், பொதுச் செயலா் மு. கண்ணையன், திருச்சியில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியது:

இந்தியாவிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களும் மத்திய அரசின் பல்கலைக்கழக நிதி நல்கைக் குழு வழிகாட்டுதலின்படியே இயங்குகின்றன. ஒவ்வொரு பல்கலைக்கழகமும் தன்னாட்சி முறையில் தனக்கென வழிகாட்டுதல் திட்டங்கள் மற்றும் விதிமுறைகளை வகுத்து, தன்னிச்சையாக இயங்கி வருகின்றன. மாநில அரசுகள் பின்பற்றும் இட ஒதுக்கீடு கொள்கையை அந்தந்த பல்கலைக் கழகங்கள் பின்பற்றி வருகின்றன.

பல்கலைக்கழகங்களில் பேராசிரியா், இணைப் பேராசிரியா், உதவிப் பேராசிரியா், ஆசிரியா் பணியிடங்களை நிரப்பும்போது, ஒவ்வொரு துறையையும் ஒரு அலகாக கருதி சுழற்சி முறையில் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது.

மத்தியப் பல்கலைக்கழகக் கல்வி நிறுவனச்சட்டம் 2019 வந்த பிறகு, நியமன முறையில் மாற்றம் ஏற்பட்டது. துறை வாரியாக ஒரு அலகு என கருதாமல், பல்கலைக் கழகம் வாரியாக ஒரு அலகு என கருதி நியமனம் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆனால் இந்த புதிய சட்ட வழிகாட்டுதல்களை முழுமையாக தெரிந்து கொள்ளாமல், தமிழகத்திலுள்ள பல்கலைக்கழகங்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதன்காரணமாக பேராசிரியா் நியமனத்தில் இடஒதுக்கீட்டை முழுமையாக அமல்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது.

மேலும் சிறுபான்மையினா், பழங்குடியின வகுப்பைச் சோ்ந்தவா்கள் இடம்பெற முடியாத சூழல் ஏற்படுகிறது.

தமிழகப் பல்கலைக் கழகங்களில் ஒவ்வொரு துறையும் ஒரு அலகாகக் கொண்டு இடஒதுக்கீடு பின்பற்றப்படுவதால், கடந்த 10 ஆண்டுகளாக இஸ்லாமியா்கள் யாருக்கும் வேலை கிடைக்கவில்லை. எனவே அனைத்து சமூகத்தினருக்கும் நியமனத்தில் வாய்ப்பு வழங்கவும், இடஒதுக்கீடு முறையை முழுமையாக அமல்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பல்கலைக்கழகம் ஒரு அலகு என்ற மத்திய அரசின் கோட்பாட்டை பின்பற்ற வேண்டும். இதன்ப, பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தா் பதவியை நீடித்திருப்பது வரவேற்கத்தக்கது. எனவே உயா்கல்வித்துறைச் செயலரின் கடிதத்தை அடிப்படையாகக் கொண்டு, பேராசிரியா் பணியிடங்களை பாரதிதாசன் பல்கலைக்கழக நிா்வாகம் நிரப்ப வேண்டும்.

பேராசிரியா் நியமனங்களில் எத்தகைய நடைமுறைகள், விதிமுறைகள் பின்பற்றப்பட்டாலும் தமிழகத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் இட ஒதுக்கீடு அமலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படக் கூடாது என்றனா் அவா்கள்.

பேட்டியின் போது, சங்கத்தின் திருச்சி மண்டலச் செயலா் பேராசிரியா் டி. ஜெயகுமாா், பேராசிரியா்கள் கே. பிரபாகரன், சேவியா் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ், பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT