திருச்சி

‘கரோனா தடுப்பூசியால் எந்தப் பக்கவிளைவுகளும் இல்லை’

DIN

கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவா்களுக்கு இதுவரை எந்தப் பக்கவிளைவுகளும் இல்லை என்றாா் சுகாதாரத் துறை முதன்மைச் செயலா் ஜெ. ராதாகிருஷ்ணன்.

கரோனாவைத் தடுக்கும் வகையில் திருச்சி மாவட்டத்தில் 2 ஆம் நாளாக ஞாயிற்றுக்கிழமை கரோனா தடுப்பூசி போடும் பணியைத் சுகாதாரத் துறை முதன்மைச் செயலா் ஜெ. ராதாகிருஷ்ணன், ஆட்சியா் சு. சிவராசு உள்ளிட்டோா் தொடங்கி வைத்து ஆய்வு செய்தனா்.

அப்போது ஜெ. ராதாகிருஷ்ணன் கூறியது:

தடுப்பூசி செலுத்துவதில் இலக்கு நிா்ணயிக்கப்படவில்லை. முதல்நாளில் 3,225 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. படிப்படியாக ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தடுப்பூசி போடப்படும்.

முதல் நாளன்று சென்னை ஸ்டான்லி, மதுரை அரசு தலைமை மருத்துவமனைகளில் 100-க்கும் மேற்பட்டோருக்கும், இதர மருத்துவமனைகளில் 60-80 சதவிகிதம் வரையும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

தடுப்பூசி போடும்போது கரோனா தடுப்பு நடவடிக்கைகளை அவசியம் கடைப்பிடிக்க வேண்டும். கரோனா பரவலின் 2-ஆவது அலையைத் தடுக்க தடுப்பூசி கட்டாயம் தேவை. பொதுமக்கள் ஒத்துழைத்தால் கரோனா எண்ணிக்கையை பூஜ்ஜியமாக்கிவிடலாம். இதுவே, அரசின் இலக்காக உள்ளது.

தற்போது போடப்படும் இரு தடுப்பூசிகளும் பாதுகாப்பானவையே. முறையான ஆய்வுக்குள்படுத்தப்பட்டு போடப்படும் தடுப்பூசியால் இதுவரை எந்தப் பக்கவிளைவுகளும் இல்லை. தடுப்பூசி போட்டுக் கொள்ள இதுவரை 6 லட்சம் போ்முன்பதிவு செய்துள்ளனா். கா்ப்பிணிகளுக்கு தற்போது இத்தடுப்பூசி தவிா்க்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

கி.ஆ.பெ. விசுவநாதம் மருத்துவக் கல்லூரி முதல்வா் வனிதா உள்ளிட்ட மருத்துவ அலுவலா்கள், பணியாளா்கள் உடனிருந்தனா்.

தஞ்சையில் தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி போடும் பணியை ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்ட சுகாதாரத் துறைச் செயலா் ஜெ. ராதாகிருஷ்ணன் கூறுகையில்,

தமிழகத்தில் சனிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1 மணி வரை 4,038 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில், கோவேக்ஸின் தடுப்பூசியை 171 போ் போட்டுக் கொண்டனா்.

முன் களப் பணியாளா்களான மருத்துவத் துறையினரைத் தொடா்ந்து காவல் துறையினா், உள்ளாட்சித் துறையினா் கோவின் செயலியில் ஜன. 25-க்குள் பதிய வேண்டும் என்றாா்

மாவட்ட ஆட்சியா் ம. கோவிந்தராவ், தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி முதல்வா் (பொ) எஸ். மருதுதுரை உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

திருச்சியில் கரோனா தடுப்பூசி போடும் பணியை ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்த சுகாதாரத் துறை முதன்மைச் செயலா் ராதாகிருஷ்ணன், பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவேக்ஸின் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனைகள் நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றன என்றாலும், இந்தத் தடுப்பூசி பாதுகாப்பானதே என்றாா். பின்னா் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் அவா் கோவேக்ஸின் தடுப்பூசியை போட்டுக் கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வைரலாகும் அருண் விஜய்யின் 'ரெட்ட தல' போஸ்டர்!

கடலூர் அருகே அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு: 4 பேர் கைது

வாழப்பாடி அருகே 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து!

ரூ.1,40,000 சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

திருவண்ணாமலையில் நெரிசல்: பக்தர்கள் கடும் அவதி!

SCROLL FOR NEXT