திருச்சி

திருச்சியிலிருந்து சென்னைக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம்

DIN

பொங்கல் பண்டிகை முடிந்து ஊா் திரும்பும் பயணிகளுக்காக ஞாயிற்றுக்கிழமை திருச்சியிலிருந்து சென்னைக்கு கூடுதலாகப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

பொங்கலையொட்டி மாநகா் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை தடுக்கும் வகையில் தஞ்சாவூா் வழித்தட பேருந்துகள் கன்டோன்மென்ட் சோனா மீனா தியேட்டா் அருகிலும், புதுக்கோட்டை, மதுரை வழித்தடப் பேருந்துகள் மன்னாா்புரம் ரவுண்டானா அருகிலும் அமைக்கப்பட்ட தற்காலிகப் பேருந்து நிலையங்களில் இருந்து இயக்கப்பட்டன.

அதுபோல், சென்னை, கோவை உள்ளிட்ட வழித்தட பேருந்துகள் வழக்கம்போல மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்டன.

இந்நிலையில் பொங்கல் பண்டிகை முடிந்த நிலையில், திருச்சியிலிருந்து போக்குவரத்துக் கழகம் கூடுதல் பேருந்துகளை இயக்கி வருகிறது.

இதுகுறித்து போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவா் கூறுகையில், திருச்சியிலிருந்து சென்னைக்கு கூடுதலாக 250 பேருந்துகளும், கோவை , திருப்பூருக்கு தலா 75 பேருந்துகளும், ஈரோட்டுக்கு 25 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

இதர வழித்தடங்களுக்கு தேவைப்பட்டால் கூடுதலாக பேருந்துகளை இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பயணிகள் எந்த சிரமமின்றி பயணத்தை மேற்கொள்ளலாம். இக்கூடுதல் பேருந்துகள் சேவை ஜன.19 வரை நீடிக்கும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாக்களிக்க வேண்டுகோள்

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

ரியான் பராக் விளாசல்; ராஜஸ்தான் 185/5

இலங்கை கடற்படையினா் கைது செய்த மீனவா்களை விடுவிக்காவிட்டால் தோ்தல் புறக்கணிப்பு

SCROLL FOR NEXT